தொற்றுநோய்களின் உலகம்! - 25

ஹெல்த்

 

ருத்துவ வளர்ச்சி பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. பல தொற்றுநோய்களை விரட்டியிருக்கிறோம். பல நோய்களுக்கு சிகிச்சைகளைக் கண்டறிந்திருக்கிறோம். ஆனால், நோய்களின் தன்மையைக் கண்டறியும் தொழில்நுட்பத்தில் இன்னும் நாம் 100 சதவிகிதம் என்ற துல்லிய இலக்கை எட்ட முடியவில்லை. எவ்வளவு நவீன சோதனைகளாக இருந்தாலும், 90 சதவிகிதம்தான், ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ என்று கண்டறிய முடியும்.

ஒருவரிடமிருந்து ரத்தம் எடுத்து, ஏதோவொரு தேவைக்காக இன்னொருவருக்கு ஏற்றுகிறோம். ரத்தம் எடுப்பதற்கு முன்னரே ஆறுவிதமான நோய்களுக்கான சோதனைகளைச் செய்துதான் எடுக்கிறோம். அப்படிச் சோதித்து எடுக்கப்படும் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றினால், 100 சதவிகிதம் நோய்த்தொற்றுகள் இருக்காது என்று நிச்சயம் நம்ப முடியாது.

ஒருவர், ஹெச்.ஐ.வி பாதிப்புள்ள ஒருவரிடம் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்... அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுவிட்டது. இப்போதிருக்கும் மிக நவீன சோதனையில் அவரது ரத்தத்தை ஆய்வு செய்தால்கூட 18 நாள்கள் கழித்துத்தான் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதைக் கண்டறிய முடியும். இந்த 18 நாள்களுக்குள் ரத்தத்தைப் பரிசோதித்தால், ஹெச்.ஐ.வி பாதிப்பு தெரியவராது. அவரது ரத்தத்தை மற்றவருக்கு  ஏற்றிவிட்டால், ஏற்றப்பட்டவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick