``பாடகர்களுக்கு சாரீரம் மட்டுமல்ல... சரீரமும் முக்கியம்!’’ - சுதா ரகுநாதன்

உடலுக்கும் தொழிலுக்கும் - 1புதிய பகுதி!

 .நா சபையில் 2016-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இரண்டு மணி நேரம் கர்னாடக இசைக் கச்சேரி. ஐ.நா சபை உறுப்பினர்கள் அனைவரையும் குரலால் மெய்மறக்கச் செய்தார் சுதா ரகுநாதன். நிகழ்ச்சி முடிந்ததும் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், சுதா ரகுநாதனின் உடல்நிலை கச்சேரி நடைபெறுவதற்கு முன்னால் எப்படி இருந்தது என்பது அவரது கச்சேரியை ரசித்துக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“ஐ.நா.சபையில் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னால், ஒவ்வாமையும் சளித் தொந்தரவும் ஏற்பட்டன. ஒரு வாரம் மருந்து சாப்பிட்டும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. ஐ.நா சபை நிகழ்ச்சி என்பதால் ரத்துசெய்யவும் முடியாது. அந்தப் பிரச்னையோடு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டேன். திட்டமிட்டதுபோல் பாடி முடித்தேன். உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால், அந்த நிகழ்ச்சியில் இன்னும் நன்றாகப் பாடியிருக்கலாமே என்ற வருத்தம் இன்றும் இருக்கிறது” என்கிறார் சுதா ரகுநாதன். 

“பாடகர்கள் வெறும் குரல்வளத்தை மட்டும் பாதுகாத்தால் போதாது. முழு உடலையும் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கவேண்டியது அவசியம். உடல் எடையை அதிகரிக்கவிடக் கூடாது. வயிற்றுப் பகுதியில் சதை போட்டுவிட்டால், மூச்சைப் பிடித்துப் பாடுவது சிரமமாகிவிடும். சரியான நிலையில் உட்கார்ந்து பாட வேண்டும். கூன் போட்டு வளைந்த நிலையில் உட்கார்ந்து பாடினால், தோள்பட்டைவலி, இடுப்புவலி போன்றவை ஏற்பட்டுவிடும். கச்சேரிகளில் மணிக்கணக்காகச் சம்மணம் போட்டு அமர்வதால் கால் நரம்பு இழுத்துக்கொள்வது, தொடை பிடித்துக்கொள்வது போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர், கால், தொடையை இலகுவாக்குவதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிக நேரம் பாடுவது, ஒரே நாளில் இரண்டு கச்சேரிகளில் பாடுவது, குரலுக்கு அதிகச் சிரமம் கொடுப்பது, கத்திப் பாடுவது போன்றவை குரல்வளையைச் சேதப்படுத்திவிடும். மேடையில் உட்காரும்போது நம்முடனிருக்கும் பிற கலைஞர்களுக்குச் சளியோ, காய்ச்சலோ இருந்தால், அது நமக்கும் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கைகளின் மூலமாகவும் கிருமிகள் பரவும் என்பதால், நான் பிறருடன் கைகுலுக்குவதைத் தவிர்த்துவிடுவேன். நம் கலாசாரப்படி, இருகரம் கூப்பி ‘வணக்கம்’ தெரிவிப்பேன். கச்சேரி முடிந்து வீடு திரும்பியதும் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுவேன். தொற்றுநோய்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள இது எனக்கு உதவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick