குழந்தைகளைக் கண்டிக்கும் ‘டைம் அவுட்’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆனந்தம் விளையாடும் வீடு-16

சென்ற இதழின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் அடுத்த இதழிலும் குழந்தையின் இரண்டு வயதிலிருந்து மூன்று வயதுவரையிலான பேரன்ட்டிங் பற்றித்தான் பேசப் போகிறேன். குறிப்பிட்ட இந்த ஒரு வருட இடைவெளியில், சொல்லவேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன.

டெலிவிஷனும் கேட்ஜெட்டும்!

குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை இந்த வயதிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அந்தப் பிஞ்சு விரல்களின் கைகளில் இருக்கவேண்டியவை பொம்மைகள்தானே தவிர, ரிமோட் அல்ல. அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும்போது குழந்தைகளின் கண்கள் வறண்டுவிடும். அடுத்தது கேட்ஜெட். உங்களைத் தொல்லை பண்ணக் கூடாது என்று குழந்தைகளுக்கு கேட்ஜெட் கொடுக்கிறீர்கள் என்றால், அது மிகப் பெரிய தவறு. இந்தத் தவற்றை இன்றைக்கு, பத்தில் ஒன்பது பெற்றோர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

புதுப்புது உணவுகளை அறிமுகப்படுத்துங்கள்!


‘என் பாப்பா கொழுகொழுன்னு இருக்கா... அதனால நல்லா ஆரோக்கியமாதான் இருப்பா’ என்று நம்பிக்கொண்டிருக்காதீர்கள். எடை அதிகமாக இருக்கிற குழந்தை, சத்துக்குறைவோடும் இருக்கலாம். அதனால், எல்லா வகை உணவுகளையும் அவர்களின் நாக்குக்கு அறிமுகப்படுத்துங்கள். அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கும். கிடைத்தால் பசும்பால், கிடைக்காவிட்டால்  ஆரஞ்சு நிற ஆவின் பால் என தினமும் 400 மி.லி பால் அவசியம் குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick