`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி | Para Swimming Athlete Thejaswini talks about her success - doctor vikatan | டாக்டர் விகடன்

`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி

தன்னம்பிக்கை

நான் ஒவ்வொரு முறை தண்ணீருக்குள்ள இறங்கும்போதும், ‘இதுதான் உனக்கான இடம்... உன் வெற்றிக்கான இடம். தோத்துடக் கூடாது தேஜு. நீ மத்தவங்க மாதிரி இல்லை. உன் குறையைப் போக்குற ஒரே இடம் இதுதான். இதுல விட்டுடாம ஜெயிச்சிடு... ஜெயிச்சிடு’னு ஏதோ ஒண்ணு என்கிட்ட சொல்லிட்டே இருக்கும். அதுதான் என்னை இன்டர்நேஷனல் கேம்ஸ்வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கு அண்ணா’’ - நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் அருவிபோலப் பாய்கின்றன தேஜஸ்வினியிடமிருந்து.

சென்னை, தாம்பரத்துக்கு அருகேயுள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, பிறவி மாற்றுத்திறனாளி. ப்ளஸ் டூ மாணவி. ஏழு வயதில் பிஸியோதெரபிக்காக நீச்சல் பழகியவர், இன்று ஆசிய அளவிலான பாரா ஸ்விம்மிங் போட்டிகளில் அசத்திக்கொண்டிருக்கிறார். அன்று, ‘ஒரு கையைவெச்சுக்கிட்டு எப்படி நீச்சலடிப்பே?’ என்று கேட்டவர்கள் மட்டுமல்ல, தேஜஸ்வினியின் எதிர்நீச்சலை இன்று பல நாடுகளும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick