தொடர் கருச்சிதைவு... - காரணம் சொல்லும் கேர்யோடைப் டெஸ்ட்

ஹெல்த்

ர்க்கரைநோய் பரிசோதனை தெரியும், கொலஸ்ட்ராலுக்கான பரிசோதனை தெரியும்... அதென்ன கேர்யோடைப் (Karyotype) டெஸ்ட்? இதுவரை கேள்விப்படாத பரிசோதனையாக இருக்கிறதே...’ என்று யோசிப்பவர்கள், மகப்பேறு மருத்துவர் ரஜனி சொல்வதைக் கேளுங்கள்.

‘`மனிதர்களின் உடம்பு, கோடிக்கணக்கான செல்களால் ஆனது என்பது நமக்குத் தெரியும். நம் ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும், ‘ஜெனடிக் மெமரி’களை உள்ளடக்கிய 46 குரோமோசோம்கள்
23 ஜோடிகளாக இருக்கும். ‘ஜெனடிக் மெமரி’ என்றால், மரபணு நினைவகம். அதாவது, இந்த 46 குரோமோசோம்களில் நம் முப்பாட்டன் - முப்பாட்டி, தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா என எல்லோருடைய மரபணு நினைவகங்களும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருக்கும். ஒரு குழந்தைக்கு அதன் அம்மாவின் மூக்கு, அப்பாவின் உயரம், முப்பாட்டானாரின் முன் கோபம் எல்லாம் சேர்ந்திருப்பதற்கு இது காரணம். தவிர, இந்த 46 குரோமோசோம்களில் இரண்டு செக்ஸ் குரோமோசோம்களும் இருக்கும். அந்த இரண்டில் ஒன்று, ‘எக்ஸ்’, இன்னொன்று, ‘ஒய்’ என்றால், பிறக்கப்போவது ஆண் குழந்தை. இரண்டுமே ‘எக்ஸ்’ என்றால், பிறக்கப்போவது பெண் குழந்தை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick