காமமும் கற்று மற! - கூடற்கலை - 10 | Sexual awareness series - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

காமமும் கற்று மற! - கூடற்கலை - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

`ஒத்த சொல்லால
என் உசுரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்டைக் கண்ணால
என்னை தின்னாடா...
பச்சைத்தண்ணிபோல்
அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு
நித்தம் குடிச்சு என்னைக் கொன்னாடா...’

- கவிஞர் சினேகன்


`இ
ன்று பட்டினியால் இறந்துபோகிறவர்களைவிட, உடல் பருமனால் இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கை அதிகம்’ - உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) தன் `ஹோமோ டியஸ்’ (Homo Deus) புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.இதயப் பிரச்னை முதல் எலும்புத் தேய்மானம்வரை பல நோய்கள் வருவதற்குக் காரணம் உடல் பருமன். இது, கருத்தரிப்பதிலும் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். காரணம், அது குறித்த விழிப்பு உணர்வு இல்லாமை. அண்மைக்காலமாக உடல் பருமனால் கருத்தரிக்க முடியாமல் போவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது.