உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகள்! | Healthy food for sleep - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகள்!

ஹெல்த்

டலும் மனதும் உற்சாகமாக இருக்க உறக்கம் அவசியம். சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் உறங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். `சராசரியாக நாளொன்றுக்கு, ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பலரும் இன்று தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடத் தூக்கத்துக்கும் உணவுப் பழக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தூக்கத்தை வரவழைக்கவும், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வைப் போக்கவும் சில உணவுகள் உதவும்.