டாக்டர் நியூஸ் | Doctor news - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

டாக்டர் நியூஸ்

தகவல்

எடை குறைக்குமா `டயட் டிரிங்க்ஸ்’?

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை பற்றிய கவலை உலகெங்கும் இருக்கிறது. இதனால் தங்களது உடல் பருமனாகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் ‘டயட் டிரிங்க்ஸ்’ எனப்படும் சர்க்கரை சேர்க்காத குளிர்பானங்களுக்கு மாறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு குறைகிறது. ஆனால், `டயட் பானங்களால் உடல் எடை குறைகிறது என்ற அடிப்படை நம்பிக்கையே தவறு’ என்கிறது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு.