குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி? | How to increase children's memory? - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?

ம் குழந்தைகள் போட்டிகள் நிறைந்த சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். போட்டிகளும், படிப்பின் மீதான அழுத்தமும் குழந்தைகளின் உலகத்தைச் சுருக்கிவிட்டன. வெயிலிலும் மழையிலும் ஓடியாடி விளையாடவேண்டிய குழந்தைகளை கம்ப்யூட்டர், மொபைல் போன்றவை அறைக்குள்ளேயே கட்டிப்போட்டுவைத்திருக்கின்றன. இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஒரு பக்கமெனில், நம் உணவுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இன்னொரு பக்கம். கொழுப்புச்சத்து நிறைந்த, ஆரோக்கியமற்ற உணவுகளே குழந்தைகளைச் சூழ்ந்திருக்கின்றன. இந்த உணவுப்பழக்கம் குழந்தைகளின் உடல்நலனுக்கு மட்டுமின்றி, மனநலனுக்கும் சவாலாக மாறியிருக்கிறது. குறிப்பாக, நினைவாற்றல் பாதிப்பு. இன்றைய குழந்தைகள் பெரிதும் எதிர்கொள்கிற சவால் இது. படிப்பு உட்பட வாழ்க்கையின் எல்லா நகர்வுகளுக்கும் நினைவாற்றல் அவசியம்.