ப்ளூடூத் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? | is bluetooth headset safe to use? - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ப்ளூடூத் பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

ஹெல்த்

கையில் ஃபிட்னெஸ் பேண்ட், காதில் வயர்லெஸ் ஹெட்போன் என இளைஞர்களின் உடலில் ஏதேனும் ஒரு கேட்ஜெட் கர்ணனின் கவசம்போல எப்போதும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. இத்தகைய `Wearable Gadgets’தாம் இப்போதைய டிரெண்டும்கூட. `ஏர்பாட்ஸ்’ (Airpods) எனப்படும் அந்த ப்ளூடூத் ஹெட்போன் இவற்றில் லேட்டஸ்ட்.  கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்துவிட்ட இந்த ஏர்பாட்ஸ் மற்றும் இன்னபிற ப்ளூடூத் ஹெட்செட்கள் புற்றுநோயை உருவாக்கும் அளவுக்கு அபாயகரமானவை என்கிற பீதியும் கூடவே கிளம்பியிருக்கிறது.