“விருப்பு, வெறுப்பையெல்லாம் ஓரங்கட்டிட்டுதான் ஓட்டணும்!” - டிரைவர் பார்த்திபன் | driver parthiban about health care - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

“விருப்பு, வெறுப்பையெல்லாம் ஓரங்கட்டிட்டுதான் ஓட்டணும்!” - டிரைவர் பார்த்திபன்

உடலுக்கும் தொழிலுக்கும் - 4

யணங்கள் எப்போதுமே தித்திப்பானவை. காற்றை ஊடாடிப் பறக்கும் ரயில் பயணமாகட்டும், இரவு நேர ஜன்னலோரப் பேருந்துப்  பயணமாகட்டும்... அத்தனையும் பரவசம்தான். கனத்த மனதை லேசாக்கும் சுகானுபவத்தைப் பயணம் தருகிறது. குழந்தை மனதுடன் பயணத்தை ரசிக்கும் இயல்பு அனைவரிடமும் இருக்கும். ஆனால், பயணத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக்கொண்டிருக்கும் ஓர் ஓட்டுநரிடம் அதே மனநிலையைக் காண  முடியுமா? தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் பார்த்திபன். 24 ஆண்டுகளாக டாக்ஸி டிரைவராகப் பணியாற்றிவருகிறார். 17 ஆண்டுகள் வாடகை கார்  ஓட்டியவர், இப்போது சொந்தமாக வாகனம் வாங்கி டிரைவராகத் தன் பணியைத் தொடர்கிறார். 

[X] Close

[X] Close