“இந்த வேலை நல்ல உள்ளங்களை சம்பாதிச்சு கொடுத்திருக்கு!” - அஞ்சல் ஊழியர் கு.விஜயரத்தினம் | Balancing personal health and Profession - Postal worker k.vijayaratnam - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

“இந்த வேலை நல்ல உள்ளங்களை சம்பாதிச்சு கொடுத்திருக்கு!” - அஞ்சல் ஊழியர் கு.விஜயரத்தினம்

உடலுக்கும் தொழிலுக்கும் - 8

‘நலம்... நலமறிய ஆவல்’ என்று பல கிலோமீட்டர் தாண்டி அன்பைச் சுமந்துவரும் கடிதப் போக்குவரத்து குறைந்துவிட்டபோதிலும், தபால்காரர்களின் பணிச்சுமை குறையவில்லை. வெயில், மழை என எது வந்தாலும் தபால் சேவை முடங்குவதில்லை. திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, கீழப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.விஜயரத்தினம். பாவூர்சத்திரம் துணை தபால் நிலையத்தில் கிராமப்புற அஞ்சல் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். 1982-ம் ஆண்டு தபால்களை விநியோகிப்பதற்காகத் தொடங்கிய இவரது பயணம், 36 ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்கிறது. 36 ஆண்டுகால அனுபவத்தையும் அதிலிருக்கும் இடர்ப்பாடுகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.