பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | e.v.k.s.elangovan sharing about life experiences - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மனசே மனசே...

``ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் வாழ்க்கையில், என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் மனஅழுத்தத்தை விதைத்துவிட்டுப் போனது. அதற்குக் காரணம்... அவர் இறப்பதற்கு முன்பாகத் தமிழகம் வந்திருந்தபோதுதான் அவரோடு நான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவ்வளவு எளிமையாகப் பேசிப் பழகிய அந்தத் தலைவர், ‘குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார்’ என்ற செய்தியைக் கேட்ட கணம், மனதளவில் சுக்கு நூறாக உடைந்துபோனேன். அப்போது ஏற்பட்ட அந்த மனஅழுத்தத்திலிருந்து மீண்டுவர எனக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டது!’’ என்று இப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!