இணைப்பிதழ்
ஸ்பெஷல்
கோடை கொண்டாட்டம்!
Published:Updated:

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

உங்களைச் செம்மைப்படுத்தும் செவி உணவு

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

‘ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்’ என்று உங்களுக்கு யாராவது கதை சொல்ல ஆரம்பித்ததும், ‘இது புதுக்கதையா, ஏற்கெனவே சொன்ன கதையா?’ என்று கேட்பீர்கள்தானே...உங்களுக்கு, தினந்தோறும் புதுப்புது கதைகள் சொல்லி அசத்தப்போகிறார்கள், கதை சொல்லிகள். இந்தக் கோடை விடுமுறையை, சுட்டித் தமிழ் கதைகளோடு கொண்டாடுங்கள்.

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

குமார் ஷா: இவரின் சொந்த ஊர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருக்கும் தாட்டக்குளம். சிறந்த கதை சொல்லி. தமிழ்நாட்டின் பல பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்லிவருபவர். நாடகங்கள் நடத்துபவர். களிமண், அட்டை போன்றவற்றில் சிறுவர்களுக்கு  பொம்மைகள் செய்ய கற்றுத்தருபவர். அந்தப் பொம்மைகள் மூலம் கதை சொல்லி, அனைவரையும் கவர்பவர்.

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!

நீதிமணி: வேலூர் பேரணாம்பட்டு ஊரைச் சேர்ந்த இவர், சிறுவர்களுக்காக நூற்றுக்கணக்கான கதைகள் எழுதி இருக்கிறார். ‘ஒரு சாண் மனுசன்’ என்ற சிறுவர் கதைகள் தொகுப்பாக வந்துள்ளது.   பள்ளிக் கூடங் களிலும் பல்வேறு விழா மேடைகளிலும் குழந்தை களுக்காக கதை சொல்லி வருபவர். கவிதைகளும் எழுதிவருகிறார்.

இந்த நம்பருக்கு டயல் செய்யுங்கள்... தினம் ஒரு கதையைக் கேளுங்கள்!

தினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்!