அவள் 16
Published:Updated:

மெகா பரிசுப் போட்டி!

18 பவுன் தங்கம்..!

ஹாய் வாசகிகளே!

மெகா பரிசுப் போட்டி!

வள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் விதம்விதமான 18 போட்டிகள் தொடர்ந்து 6 இதழ்களுக்கு அணி வகுக்கப்போகின்றன. இதுவரை 9 போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியானது. இதோ, அடுத்த 3 போட்டிகளுக்கான அறிவிப்புகள். பங்கெடுங்கள், பரிசை வெல்லுங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்

இது அதிர்ஷ்டப் போட்டியல்ல... திறமையாளர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. ஒருவர் எத்தனை போட்டியில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டி தொடர்பாக வேறு கடிதப் போக்குவரத்துத் தேவையில்லை. படைப்புகளைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே, நகல் எடுத்துக்கொண்டு அனுப்பிவைக்கவும்.

போட்டி எண் 10

கவிதைப் போட்டி

மெகா பரிசுப் போட்டி!

‘பயணம்' என்கிற தலைப்பில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒரு கவிதையை எழுதி அனுப்பவும்.

போட்டி எண் 11

க்ளிக்

மெகா பரிசுப் போட்டி!

ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி என்கிற தீமில் புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். உதாரணத்துக்கு, தெருவோர தள்ளுவண்டி வியாபாரி, கோயில் தெருக்களில் ரசிக்கும்படியான ஒரு காட்சி, அதிகாலை தெருக்கூட்டும் பெண் என்று பலவாறு இருக்கலாம்.

போட்டி எண் 12

நானும் அவளும்/அவனும்!

மெகா பரிசுப் போட்டி!

திருமணம், கல்வி, தொழில் என உங்கள் வாழ்க்கையின் ஏதாவதொரு முக்கிய அத்தியாயத்தில் பெரும்பங்காற்றி, உங்களின் வெற்றிக்கு வித்திட்ட உங்கள் இனிய தோழி அல்லது தோழன் குறித்த நிகழ்வு மற்றும் உங்கள் இருவரின் புகைப்படத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் வெற்றிக்கு, இந்த நட்பு துணைபுரிந்திருக்க வேண்டியது முக்கியம்.

போட்டி 10, 11, 12 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.12.2015.

உங்கள் படைப்புகளை, போட்டியின் தலைப்பைக் குறிப்பிட்டு, ‘அவள் விகடன்’, 757, அண்ணா சாலை, சென்னை-2 என்கிற முகவரிக்கு எழுதி அனுப்பவும். அதாவது, முகவரியில் முதல் வரியாக போட்டியின் தலைப்பு கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். மின்னஞ்சல் முகவரி: aval@vikatan.com

கடந்த இதழில் அறிவிக்கப்பட்ட போட்டிகள்:

7. சிறுகதைப் போட்டி

‘தலைமகள்’ என்கிற தலைப்பில், பெண்களை மையமாகக்கொண்ட கருவை வைத்து, ஒரு பக்கக் கதையை எழுதி அனுப்பவும். ஏ4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.

8. வீடியோ எடுங்க

(குறும்படப் போட்டி)

தண்ணீர், மின்சாரம், சாப்பாடு இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, `இவற்றை வீணாக்கக்கூடாது' எனும் கருத்தை உணர்த்தும் வகையில் மூன்று நிமிடத்துக்குள்ளான குறும்படமாக எடுத்து அனுப்புங்கள். வீடியோ கேமரா அல்லது உங்கள் மொபைலில் இருக்கும் வீடியோ கேமராவைப் பயன்படுத்தி எடுக்கலாம்.

குறிப்பு: இந்த வீடியோக்களை வி.சி.டி அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பவேண்டும் என்பது முக்கியம்.

9. என் செல்ல பப்பி

உங்கள் வீட்டு பெட் விலங்கு/பறவை பற்றி எங்களுக்கு அருமையான புகைப்படம்/வீடியோவோடு எழுதி அனுப்புங்கள். அவை செய்யும் குறும்பு, அவற்றின் ஸ்டைல் போட்டோ, உங்களுக்கும் அதுக்குமான நெருக்கம், அதனுடனான மறக்க முடியாத சம்பவம் என எல்லாவற்றையும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளுங்கள்.

போட்டி 7,8,9 ஆகியவற்றுக்கான படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள், 8.12.2015.