நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

னிமனிதர்களின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத்த வழிகாட்டி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த நாணயம் விகடன் நல்லதொரு நண்பனைப்போல கடந்த 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. விழிப்பு உணர்வுக் கூட்டங்கள், கட்டண வகுப்புகள் எனப் பல்வேறு வகையில் வாசகர்களுக்கு நேரடியாக உதவிவந்த நாணயம் விகடன், இந்த ஆண்டு முதல் முக்கியமான ஒரு பணியைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. அதுதான், வருகிற டிசம்பர் 16, 17 தேதிகளில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தும்  ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போ. 

பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!கான்க்ளேவ் என்று சொல்லப்படுகிற இந்தக் கருத்தரங்கில் 15 நிபுணர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசவிருக்கின்றனர். இந்த நிபுணர்களில் பலர் மும்பை, டெல்லி, பெங்களூரு, சிங்கப்பூர் எனப் பல்வேறு
இடங்களிலிருந்து வருகின்றனர். இவர்களில் சிலர், சென்னையில் நடக்கும் கருத்தரங்கில் பேசுவது இதுவே முதல்முறை. 

இந்தக் கருத்தரங்கானது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் மிக உதவியாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமல்ல, தொழில் செய்பவர்கள், பொருளாதாரத்தின் போக்கைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் தொழிலையும், முதலீட்டையும் மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், வணிகம், பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் என எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் இந்தக் கருத்தரங்கை ‘மினி யுனிவர்சிட்டி’ என்று சொல்வதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தைப்  புரிந்துகொள்ளலாம்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள (பார்க்க பக்கம் 11, 12, 13) இதுவரை பதிவு செய்யாதவர்கள், உடனடியாகப் பதிவுசெய்து, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

டிசம்பர் 16, 17 தேதிகளில் கலைவாணர் அரங்கத்தில் நாணயம் விகடனின் எக்ஸ்போவும் நடக்கவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதன் மூலம் தனிமனிதர்களின் நிதி நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு தெளிவு பெறமுடியும்.
 
இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் கான்க்ளேவிலும், எக்ஸ்போவிலும் பங்கேற்பதே புத்திசாலித்தனம். நாணயம் விகடன் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறும் வாசகர்கள், இந்தக் கருத்தரங்கிலும், எக்ஸ்போவிலும் பங்கேற்று, தங்கள் வாழ்க்கையை மேலும் வளமாக்கிக்கொள்வார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- ஆசிரியர்