சினிமா
Published:Updated:

மக்கள் நீதிமன்றமும் மக்கள் மன்றமும்

மக்கள் நீதிமன்றமும் மக்கள் மன்றமும்
பிரீமியம் ஸ்டோரி
News
மக்கள் நீதிமன்றமும் மக்கள் மன்றமும்

மக்கள் நீதிமன்றமும் மக்கள் மன்றமும்

லோக் ஆயுக்தா அமைப்பது குறித்த பொதுநல வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நாங்கள் ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசைக் கவனித்துவருகிறோம். லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையே இல்லையா? காலதாமதம் செய்வதைத்தான் அது விரும்புகிறதா?’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இறுதியாக ‘2019 பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தாவை அமைத்துவிடுவோம்’ என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

மக்கள் நீதிமன்றமும் மக்கள் மன்றமும்



‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பஞ்சாயத்துத் தலைவர் தொடங்கி முதலமைச்சர்வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு மக்கள் பிரதிநிதி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானாலும், அவர்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக் ஆயுக்தா என்ற மக்கள் நீதிமன்றத்தைத் தமிழகத்தில் அமைப்போம்’ என்று,  2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி கொடுத்துதான் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், இதுவரை அதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை தமிழக அரசு.

ஊழல் குற்றச்சாட்டுக்காக முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே சிறைச்சாலைக்குச் சென்றவர்களும், முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்காக சிபிஐ விசாரணையை எதிர்கொண்டிருப்பவர்களும் தாமாகவே முன்வந்து லோக் ஆயுக்தாவை அமைப்பார்களா என்ன?  நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் என்று பலரும் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தின் வரம்புக்குள் முதலமைச்சரைக் கொண்டுவர முடியாத அளவுக்குப் பல ஓட்டைகளை உருவாக்கி, அதன் அடிப்படையையே நீர்த்துப்போக வைத்தது.
 
வேண்டா வெறுப்பாகச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும், பற்களும் நகங்களும் இல்லாத அந்த லோக் ஆயுக்தாவை அமைக்கக்கூட  இந்த அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. பிப்ரவரிக்குள்ளாவது லோக் ஆயுக்தாவைத் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

மக்கள் நீதிமன்றத்தை அமைப்பதில் அலட்சியம் காட்டினால், நாளை தேர்தலில் மக்கள் மன்றம் கொடுக்கும் தண்டனையிலிருந்து இன்றைய ஆட்சியாளர்கள் தப்ப முடியாது.