
MAD ராப் + சுட்டீஸ் maxஸிமம் என்ஜாய்!
சுட்டி விகடனும் `மேக்ஸ்’ ஆடைகள் நிறுவனமும் இணைந்து சென்னை, பாண்டி மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பள்ளிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை `கிறிஸ்துமஸ் தாத்தா க்ரியேஷன்ஸ்’ செய்ய வைத்து அசத்தின.

அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக `MAD ராப்’ என்று செல்லமாக சுட்டிகளால் கொண்டாடப்படும், ஹருண் ராபர்ட்டை சென்னைக்கே வரவழைத்து, வடபழனி விஜயா ஃபோரம் மாலில் சிறுவர்களுக்கான வொர்க் ஷாப்பை நடத்தியது.
போகோ சேனலின் ராப்-ன் மேட் ஷோ. `மேட் ஸ்டஃப் வித் ராப்’ என்ற யூடியூப் சேனலிலும் இவர்தான் கிங்.
ராபை நேரில் பார்க்க ரொம்ப ஆர்வமா காத்திருந்த சுட்டீஸ், ராப் வந்ததும் பெரிய ஆரவாரத்துடன் வெல்கம் பண்ணினாங்க.

``லெட்ஸ் வி ஸ்டார்ட?’’ என ராப் கேட்க...
``யெஎஎஎஸ்ஸ்ஸ்…’ என உற்சாகக் கூக்குரலில் அரங்கத்தை அதிரவைத்தார்கள் சுட்டீஸ்.
பேப்பர், ஸ்கேல், கத்தரிக்கோல், பசை வெச்சு கிறிஸ்துமஸ் ஸ்டார் செய்ய கற்றுக்கொடுத்தார். அவரைப் பார்த்து ஸ்டார்ஸை செய்துமுடித்தனர் சுட்டீஸ். கிறிஸ்துமஸுக்கு நண்பர்களுக்குப் பரிசு கொடுக்க, ஸ்மைல் பண்ணும் சாண்டா கிளாஸ் கிரீட்டிங் கார்டும் கற்றுக்கொடுத்தார் ராப். அதையும் அழகாகச் செய்து அசத்தினர் சுட்டீஸ்.

“வெரி குட்… ஆஸம்… கூல்…” என்று ராப் உற்சாகப்படுத்த, சுட்டீஸ் துள்ளி குதித்தனர். அடுத்து, ஐஸ்குச்சிகளைப் பயன்படுத்தி மௌத்தார்கான் கற்றுகொடுத்தார். அதையும் அசல்டாக செய்து, சூப்பரா வாசிச்சு விளையாடினாங்க.

கடைசியா, எல்லாரும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க...உற்சாகத்துடன் முடிந்தது ராப் திருவிழா.
ராப் பேசும்போது “உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இது ஃபன் அண்டு ஹேப்பியா இருக்க வேண்டிய நேரம். கிறிஸ்துமஸ் என்றால் செலிபிரேஷன். இன்று கிராஃப்ட் ஒர்க் ஷாப்பில் எல்லாரும் ரொம்ப நல்லா செய்தீங்க. ரொம்ப ஃபாஸ்டாவும் அழகாவும் இருந்துச்சு, ரியலி ஆசம்” என்று சுட்டிகளை உற்சாகப்படுத்தி விடைபெற்றார்.
ச.ராம் சங்கர் - படங்கள்: பெ.ராக்கேஷ்