சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வீரம் கொடுக்கும் பாடம்!

வீரம் கொடுக்கும் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீரம் கொடுக்கும் பாடம்!

வீரம் கொடுக்கும் பாடம்!

பிநந்தன்  இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தபிறகுதான்

வீரம் கொடுக்கும் பாடம்!

இந்த நாடு நிம்மதிப்பெருமூச்சு விட்டது.  தன் மண்ணின் மைந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருந்த செய்தி தெரிந்ததும் தேசமே பதைபதைத்துப்போனது. அதிலும் உள்ளூர்க் கும்பலால் தாக்கப்பட்டு, அபிநந்தனை ரத்தக் காயங்களுடன் பார்த்தபோது ஒருபுறம் ஆத்திரமும் இன்னொருபுறம் அதிர்ச்சியுமாக அனைவரும் கண்ணீருடன் காத்திருந்தோம்.

ஏற்கெனவே யுத்தக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் மோசமாக நடத்திய கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் நம்மை வதைத்துக்கொண்டிருந்தன. ஆனால் `அபிநந்தனை விடுவிப்போம்' என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பு நம்மை நிம்மதியடையச் செய்தது. அமெரிக்கா தொடங்கி சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தமும், போர்க் கைதிகளைத் துன்புறுத்தக்கூடாது, உடனடியாக அவர்களை விடுதலை செய்துவிட வேண்டும் என்ற ஜெனிவா ஒப்பந்தமும் பாகிஸ்தான் அபிநந்தனை விடுவிப்பதற்கான முக்கியமான காரணங்கள்.

அபிநந்தனை விடுவிப்பதற்கு பாகிஸ்தான் ஒன்றும் சமாதான தேசமோ இம்ரான்கான் ஒன்றும் சமாதானக் காவலரோ அல்லர். இன்றைய சூழலில் ஒரு போரைத் தாங்கும் அளவுக்குப் பாகிஸ்தானின் பொருளாதார நிலையோ அரசியல் - சமூகச் சூழலோ இடங்கொடுக்கவில்லை. ஏற்கெனவே உலகளவில் அம்பலப்பட்டுப்போயுள்ள தனக்கு உலகளவில் ஆதரவு கிடைக்காது என்பதையும் பாகிஸ்தான் புரிந்துவைத்துள்ளது. அதனால்தான் உடனடியாக அபிநந்தனை விடுவிக்கவும் செய்தது. இந்தச் சூழல்தான் இந்திய அரசு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கே சென்று தங்கள் நியாயத்தை வலியுறுத்தும் வாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியத் தரப்பில் சிந்திக்கவேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது.

போர்க்களத்துக்கு நாம் அனுப்பும் வீரர்கள் புறநானூற்று வீரத்தைக் காட்டுபவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அபிநந்தன் போன்ற மாவீரர்களை யுத்தகளத்துக்கு அனுப்பும்போது புறநானுற்றுக் காலத்துப் போர்க்கருவிகளைக் கொடுத்தனுப்பலாமா? அபிநந்தன் போரிடச் சென்றது இருபது வருடத்துக்கு முந்தைய போர் விமானம். இந்த விமானம் எதிரிகளின் நவீன ரக `எப் 16’ விமானத்துக்கு ஒப்பானது இல்லை என்று போர் அனுபவம் கொண்ட ராணுவ அதிகாரிகளே கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள். ஓட்டை உடைசலான போர்க்கருவிகளையும் விமானங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நவீன ரக விமானங்களையும் ராணுவத் தளவாடங்களையும் வாங்க நம் ஆட்சியாளர்கள் ஏன் இவ்வளவு காலம் கடத்துகிறார்கள்? போபர்ஸ், ரபேல் என்று எந்தப் பக்கம் போனாலும் ஊழல் குற்றச்சாட்டும் தலையெடுப்பதுதானே முக்கிய காரணம்.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல, நம் நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதும் இந்திய ராணுவத்துக்குத் தேவையான வசதிகளை உருவாக்கிக்கொடுப்பதும் இன்றைய அவசியத் தேவைகள். அபிநந்தனின் வீரம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் பாடம் இது.