ஸ்பெஷல் 1
Published:Updated:

நமக்குள்ளே !

நமக்குள்ளே !

நமக்குள்ளே !

தோழிகளே... நாட்டில் உள்ள பெண் முதலமைச்சர்களின் எண்ணிக்கையில் தற்போது இரண்டு கூடியிருக்கிறது என்பது, நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய விஷயம்!

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக அசைக்க முடியாத கம்யூனிஸ்ட்டுகளை, வீழ்த்தி ஆட்சியைப் பிடித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு அபரிமிதமான வெற்றியைப் பெற்று தமிழக முதல்வராகியிருக்கிறார் ஜெயலலிதா!

இவர்களின் வெற்றியை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, 'பெண்கள்' என்கிற வகையில் நாம் நிச்சயமாகக் கொண்டாடலாம்தானே!

##~##

ஆனால், இப்படி ஆட்சி, அதிகாரம் என்று முக்கியமான பதவிகளில் பெண்கள் அமரும்போது, இயல்பாகவே அவர்களிடம் கூடிப்போகும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கான பலன், கொண்டாட முடியாத அளவுக்கே இருந்துவிடுவதுதான் கவலையான விஷயம்!

ஆண்களின் ஆட்சியைப் போலவே... கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு மட்டுமே இப்போதும் முன்னுரிமை ஏன்?

உண்மையில் முக்கியத்துவம் தரப்பட வேண்டியது... பெண்களுக்கான உரிமைகளுக்குத்தானே! 50 சதவிகிதத்தை விடுங்கள். சமீபமாக பேசப்படும் 33 சதவிகிதமாவது இருக்க வேண்டாமா?

தற்போது தமிழக அமைச்சரவையில் 34 பேரில் முதல்வரையும் சேர்த்து மூன்று பேர்தான் பெண்கள். மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலும் பெண்களைத் தேட வேண்டியிருக்கிறது.

'பெண்களுக்கு போதுமான அரசியல் அறிவு இருக்காது', 'அவர்களால் சரிவர பதவியைக் கையாள முடியாது' என்பது போன்ற தேவையில்லாத காரணங்கள் கற்பிக்கப்பட்டே, இதுகாலம் வரை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், 'நாங்களும் சளைத்தவர்கள் அல்ல' என்று எப்போதோ நிரூபித்துவிட்டார் இந்திரா காந்தி! இப்போதும் நிரூபித்திருக்கிறார்கள் ஜெயலலிதாவும்... மம்தாவும்! இதற்கெல்லாம் காரணம்... இவர்களுக்கெல்லாம் வாய்ப்புக் கிடைத்ததுதானே!

இவர்கள் ஏன் இன்னும் நிறைய பேருக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கக் கூடாது?!

உரிமையுடன்

நமக்குள்ளே !


ஆசிரியர்