ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

ஆனந்த விகடன் வாசகர்களே....

ஆனந்த விகடன் வாசகர்களே
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் வாசகர்களே

இந்த மாற்றங்களை எப்போதும்போல் இப்போதும் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.

ஆனந்த விகடன் வாசகர்களே....
ணக்கம்! காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதுதான் ஆனந்த விகடனின் பலம் என்பது 94 ஆண்டுக்காலமாக எங்களுடன் பயணிக்கும் உங்களுக்குத் தெரியும். நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் ஆனந்த விகடன் டிஜிட்டல் யுகம் என்னும் காலமாற்றத்தையும் புரிந்துகொண்டு தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழிலும் காலத்துக்கேற்ற புதிய தொடர்கள் இடம்பெற்றிருக்கின்றன. எண்ணங்கள் புதிதாய், வண்ணங்கள் புதிதாய், ஏராளமான புதிய பகுதிகள். அத்தனையும் உங்கள் உள்ளம் கவரும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. முக்கியமான இரு மாற்றங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆனந்த விகடன் வாசகர்களே....

ஒவ்வொரு விதையிலும் ஒருநூறு மரங்கள் இருப்பதைப்போல் ஆனந்த விகடனுக்குள்ளேயே பல விகடன்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரத்யேக அட்டைப்பட வடிவமைப்புடன் அவற்றை வடிவமைத்திருக்கிறோம். சினிமா, டிவி, ஜோக்ஸ் என்று ஒவ்வொரு பகுதிக்குமான விகடன்கள் உள்ளே. எப்போதும் வாசகர்களின் வரவேற்பைப் பெறும் ‘விகடன் பொக்கிஷம்’ பகுதியும் இடம்பெறுகிறது. இன்னும் இதுபோல பல்சுவைப் பகுதிகள் அடுத்தடுத்த இதழ்களில் இடம்பெறும். அவை குறித்த உங்கள் கருத்துகளை av@vikatan.com மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

வாசகர்களே எங்களின் முகவரி; அவர்களுக்கே எங்கள் முதல் மரியாதை. சென்ற வார ஆனந்த விகடன் இதழில் வாசகர்களாகிய உங்கள் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பச் சொல்லியிருந்தோம். பல்லாயிரங்களில் புகைப்படங்களை அனுப்பி எங்களைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள். ஆனந்த விகடன் குறித்த சிறப்பான கருத்துகளின் அடிப்படையில் வாசகர்களின் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, இந்த வார அட்டைப்படமாகவே மாற்றியுள்ளோம். உங்கள் முகமே எங்கள் முகம், வாசகர்களே எங்கள் ‘முக’வரி என்பதற்கான சாட்சியம் இந்த வார அட்டைப்படம்.

வாசகர்களாகிய உங்களை மகிழ்விப்பதற்காக உங்கள் படைப்புகளையும் பங்களிப்புகளையும் ஊக்குவிக்கும் போட்டிகளையும் அறிவித்துள்ளோம். தமிழகம் தாண்டி உலகம் முழுக்கப் பரவியிருக்கும் தமிழர்களுடன் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கிறோம்.

இந்த மாற்றங்களை எப்போதும்போல் இப்போதும் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.

வாசகர்களாகிய நீங்களே...

விகடனின் வரம்... உரம்!

நன்றி,

டீம் விகடன்.