Published:Updated:

சிக்கலான கர்ப்பம்... தீர்வுகளைச் சொல்லும் அவள் விகடன் வெபினார்!

சிக்கலான கர்ப்பம்... தீர்வளிக்கும் அவள் விகடன் வெபினார்!

சிக்கலான கர்ப்பம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி, சிக்கலான கர்ப்ப காலத்தைக் கடப்பது எப்படி, ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை அளிக்கவுள்ளார்.

கர்ப்ப காலம் அல்லது பிரசவ நேரத்தில் தாய் அல்லது குழந்தைக்கு அல்லது இருவருக்கும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை, சிக்கலான கர்ப்பம் என்று மருத்துவ அறிவியல் வரையறுக்கிறது. சிக்கலான கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Pregnancy
Pregnancy
Pixabay

சிக்கலான கர்ப்பம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, கருத்தரிக்கும் பெண்களில் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் மற்றும் சென்னை காரப்பாக்கம் அப்போலோ கிரேடில் அண்ட் சில்ட்ரன்ஸ் மருத்துவமனை இணைந்து, `சிக்கலான கர்ப்பம்... அறிவோம்! தெளிவோம்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை, டிசம்பர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தவுள்ளது.

மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சௌமியா ராகவன் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

சிக்கலான கர்ப்பம் ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி, சிக்கலான கர்ப்ப காலத்தைக் கடப்பது எப்படி, ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை அளிக்கவுள்ளார்.

சிக்கலான கர்ப்பம்... தீர்வளிக்கும் அவள் விகடன் வெபினார்!
சிக்கலான கர்ப்பம்... தீர்வளிக்கும் அவள் விகடன் வெபினார்!

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதில் அளிப்பார். வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) காலை 10.30 முதல் 11.30 மணி வரை, ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.