கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அன்புள்ள வாசகப் பெருமக்களே!

ஆசிரியர் பக்கம்
News
ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

இடையில் வந்த கொரோனாவால் தள்ளிப் போன ஆட்டோ எக்ஸ்போ, இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடக்க இருக்கிறது. டெல்லி - NCR-ல் கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்திருக்கும் இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் ஜனவரி மாதம் 13-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை மிகுந்த உற்சாகத்துடன் நடக்க இருக்கும் இந்தக் கண்காட்சியில் நம் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கார் மற்றும் பைக் நிறுவனங்களும் வழக்கம்போல பங்கேற்கின்றன.

அடுத்து வரும் ஆண்டுகளில் அறிமுகமாக இருக்கும் 75 புதிய கார் மற்றும் பைக்குகளை மட்டுமல்ல, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆராய்ச்சிக் கூடங்கள் உருவாகிவரும் கான்செப்ட் கார்கள் மற்றும் பைக்குகளும்கூட இந்தக் கண்காட்சியில் இடம்பெற்று பார்வையாளர்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தப் போகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் குறித்தான கருத்தரங்கங்கள் விருது வழங்கும் வைபவங்கள் ஒருபுறமும் ஸ்டன்ட் ஷோஸ், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்களின் அணிவகுப்புகள் என்று இன்னொருபுறம் இந்த ஆட்டோ எக்ஸ்போ களை கட்டப் போகிறது.

இந்தக் கண்காட்சி தவிர, டெல்லி பிரகதி மைதானத்தில் உதிரிபாகங்களுக்கான பிரம்மாண்டமான தனிக் கண்காட்சியும் நடைபெற இருப்பதால், எதை முதலில் பார்ப்பது, எதை அடுத்து பார்ப்பது என்ற திட்டமிடலோடு இந்தக் கண்காட்சியைக் காண சுமார் ஆறு லட்சம் பேர் திரள இருக்கிறார்கள்.

கார், பைக்ஸ், டிரக், டிராக்டர் மட்டுமல்ல... நம் நாட்டில் தயாராகும் கார், பைக், டிரக், டிராக்டர் ஆகியவற்றுக்கான உதிரிபாகங்களில் சுமார் 35% நம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவதால், ஆட்டோ எக்ஸ்போவில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தமிழ் நம் காதுகளில் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆட்டோ எக்ஸ்போவில் மீடியா பார்ட்னராக உங்கள் மோட்டார் விகடனும் பங்கேற்று நம் தமிழகத்தின் ஆட்டோமொபைல் வலிமையைப் பறைசாற்ற இருக்கிறது.

ஹால் எண் 11, ஸ்டால் எண் N10b-யில் தங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

- ஆசிரியர்