கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

அன்பு வணக்கம்!

மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு, பல நல்ல செய்திகளோடு பிறந்திருக்கிறது. செல்லுகின்ற இதே உத்வேகத்தோடு சென்றால் மின்வாகனங்கள் உற்பத்திக்குத் தலைமையிடமாக சென்னை நிச்சயம் உருவெடுக்கும். ஓலா, ஏத்தர், ஆம்பியர் போன்ற இருசக்கர வாகனங்களுக்காக மட்டுமே இதுவரை அறியப்பட்ட தமிழ்நாடு, இனிமேல் மின்சாரக் கார் உற்பத்தியின் அடையாளத்தோடும் அறியப்படும் என்பது உறுதி.

இதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது BYD e6 மின்வாகனத்தின் வருகை. டாக்ஸி செக்மென்ட்டில்தான் இப்போது இந்த கம்பெனி அடியெடுத்து வைத்திருக்கிறது என்றாலும், உலகின் பிற பகுதிகளில் இதன் வீச்சு என்பது கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பயன்படுத்தும் பிரத்தியேக வாகனங்கள் என எல்லாத் திசைகளிலும் விரிந்து பரந்திருக்கிறது.

`பேட்டரி வாகனங்கள் மட்டும்தான் என் இலக்கு’ என்று ஒருமுகமான திட்டத்தோடு உலக அளவில் செயல்படும் நிறுவனம் என்பதால், இதன் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கான சுற்றுச்சூழலையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது SKD(Semi Knocked DownKit)யாக இறக்குமதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் அசெம்பிளி செய்யப்படும் இந்த வாகனம், வெகுவிரைவிலேயே வெளிநாட்டு உதிரிபாகங்களைக் குறைத்துக் கொண்டு, உள்நாட்டு உதிரிபாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க காலம் இதைக் கட்டாயப்படுத்தப் போவது உறுதி. ஒரு கம்பெனி உள்நாட்டு உதிரிபாகங்களை எந்த அளவுக்குத் தன் கார்களில் பயன்படுத்துகிறதோ, அந்த அளவுக்கு அதன் விற்பனை விலையும் குறையும் என்பதால்... வாடிக்கையாளர்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.

இந்த ஆண்டு நடக்க வேண்டிய ஆட்டோ எக்ஸ்போ, அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை தள்ளிப் போகப் போவதில்லை. அதனால் இந்த ஆண்டு கார் மற்றும் பைக் வாங்கத் திட்டமிருக்கும் வாடிக்கை யாளர்களை மனதில் கொண்டு மூன்றுவிதமான பட்டியல் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. தீர்கமான ஒரு முடிவை எடுக்க இந்தப் பட்டியல் அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.


புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஆசிரியர்