சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

அன்பார்ந்த வாசகர்களே...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

வணக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் நம் எல்லோரையும் மகிழ்ச்சியில் திளைக்கவைக்கும் திருநாள் தீபாவளி. பண்டிகை என்பதன் பொருள், `மகிழ்ச்சி' என்பதுதானே! குடும்பத்தினர் எல்லோரும் கூடிப் பேசி மகிழ்வது, பண்டிகைகளில்தான் சாத்தியம். விகடன் வாசகர்களின் தீபாவளிக்குக் கூடுதல் சிறப்பு சேர்ப்பது, `தீபாவளி மலர்.’ வயது வித்தியாசம் தாண்டி எல்லோரும் படித்து ரசிக்க, பொக்கிஷமாக வீட்டில் பாதுகாக்க, அத்தனை அம்சங்களுடனும் உருவாக்கப்பட்ட விகடன் தீபாவளி மலர் இப்போது உங்கள் கரங்களில்!

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இடமளிக்கும் அதேநேரத்தில், நம் பண்பாட்டையும், தொன்மையையும் குழைத்துச் சேர்த்தளிக்கும் தகவல் பெட்டகமாக மலர்ந்திருக்கிறது இந்தத் தீபாவளி மலர். நடிகர் விஜய் சேதுபதியின் பேட்டியும் உண்டு; இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நடனக்கலைஞர்கள் `தனஞ்செயர்கள்’ குறித்த பதிவும் உண்டு. எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை முன்னிட்டு அவரை நினைவுகூரும் கட்டுரை இந்த மலரின் தனிச்சிறப்பு.

அன்பார்ந்த வாசகர்களே...

சுவாமி விமூர்த்தானந்தரின் அருளுரையில் தொடங்குகிறது மலர். பிரபல எழுத்தாளர்களின் சிறப்புச் சிறுகதைகள்; நவீன கவிஞர்களின் கவிதைகள்; நம் பாரம்பர்ய மண்பாண்டத் தொழில் இன்றைக்கு அடைந்திருக்கும் புதிய பரிணாமத்தைச் சுட்டிக்காட்டும் கட்டுரை; `பட்டிமன்றத் திலகம்’ சாலமன் பாப்பையா சில வார்த்தைகளுக்கு அளிக்கும் கூரிய விளக்கவுரை; சிலிர்க்கவைக்கும் இறை ஓவியங்கள்; சின்னத்திரையில் புதுவீச்சை ஏற்படுத்திவரும் ஓடிடி தொடர்களின் மலைக்கவைக்கும் பட்ஜெட் விவரம்; எப்போதும் மேடையில் எதிர் துருவங்களாக நிற்கும் பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கரின் `கலகல’ உரையாடல்; நெற்றிச்சூடி முதல் மிஞ்சி வரையிலான நம் பாரம்பர்ய ஆபரணங்களின் மேன்மையை விளக்கும் பதிவு; நகைச்சுவைத் துணுக்குகள்... என பக்கம்தோறும் காத்திருக்கிறது பரவசம்!

வேலை நெருக்கடிகளிலிருந்து நம்மை ஆசுவாசம்கொள்ளவைப்பவை பண்டிகைகளே. கூடவே கொண்டாட்ட மனநிலையையும் தருபவை. தீப ஒளித் திருநாள் அதில் முக்கியமானது. குடும்பத்தோடும், உறவுகளோடும், நட்போடும் மகிழ்ந்திருப்போம்; தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுவோம். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்