திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி பலன்கள் சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர பலன்களை வழங்குகிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

குருப்பெயர்ச்சி
நட்சத்திர பலன்கள்
சதயம், பூரட்டாதி, 
உத்திரட்டாதி, ரேவதி

சதயம்

`ஞானங்கள் பலவும் கற்க வல்லன் நன்பொருள் தேடவல்லன் சாலவே அறிந்து சொல்லும் சதயநாள் தோன்றினானே...’ - என்கிறது, நட்சத்திர மாலை. இந்த நட்சத்திரம் முழுவதும் கும்ப ராசியில் அமைகிறது. குருபகவான் ஜன்ம குருவாக பலன் தரப்போகிறார்; ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

குருப்பெயர்ச்சி
நட்சத்திர பலன்கள்
சதயம், பூரட்டாதி, 
உத்திரட்டாதி, ரேவதி

மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும். அவ்வப்போது முன்கோபம் வரும். யோகா, தியானம் ஆகிய பயிற்சிகளில் ஈடுபடுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபாடு காட்டவேண்டாம். புதியவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டாம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். சிலருக்குத் தங்களின் பங்கை விற்று நகரந்துக்கு வெளியே இடம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதி பெருகும். பணப்புழக்கம் அதிமாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும்.

அலுவலகத்தில் சக பணியாளர்கள் விடுமுறையில் செல்வதால், அவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். அதன் காரணமாக உடல் அசதி ஏற்படும். அலுவலக ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள லாம். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். மொத்ததில் இந்தக் குருப்பெயர்ச்சி, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன் புதிய படிப்பினைகளைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பூரட்டாதி

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் (கும்பம்) எனில், பெற்றோரின் அரவணைப்பு, அவர்களால் ஆதாயம் ஆகிய பலன்களை அடைவீர்கள். மணமாகாத பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புதிய வேலையில் அமரும் வாய்ப்பு ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது. உங்களுடைய நிர்வாகத்திறன், ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி
நட்சத்திர பலன்கள்
சதயம், பூரட்டாதி, 
உத்திரட்டாதி, ரேவதி

அரசால் அனுகூலம் உண்டு. தந்தையின் ஆரோக்கியம் சீராகும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்கவும். அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. பணவரவு, புகழ், கௌரவம் கூடும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்லவேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர் கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) எனில், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மனதில் பட்டதைப் பேசி விமர்சனத்துக்கு ஆளாவீர்கள். புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும். பழைய கடன் அடைய வழி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும். வருமானம் உயரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அலுவலகத்தில், சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். வேலைச்சுமை குறைந்து உற்சாகம் ஏற்படும். மொத்ததில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களின் ஆளுமையால் போட்டியாளர்களை வென்று சாதிக்கவைப்பதாக அமையும்.

உத்திரட்டாதி

ந்த நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வரர். அவருடைய நேர்மறை சக்தி மட்டுமே இதை ஆட்சி செய்கிறது என்கின்றன ஜோதிட நூல்கள். பாதங்கள் முழுவதும் மீன ராசியில் அமைந்த நட்சத்திரம் உத்திரட்டாதி. அந்த ராசிக்கு விரய ஸ்தானத்தில் குரு மறைகிறார். வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

குருப்பெயர்ச்சி
நட்சத்திர பலன்கள்
சதயம், பூரட்டாதி, 
உத்திரட்டாதி, ரேவதி

இந்தக் குரு மாற்றம் சிறிது ஆரோக்கியக் குறைவையும் வேலைச் சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே வரும் சிறுசிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம். சொல்வதைச் செய்ய முடியாத நிலை உருவாகும் என்பதால், எதன் பொருட்டும் யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அதேபோல், பழைய கடன் பிரச்னை குறித்த பயம் இனி இருக்காது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். எனினும் விஷயம் நல்லபடியாக முடிந்து திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிதாக அறிமுகமாகும் வாடிக்கையாளர் ஒருவரால் ஆதாயம் அடைவீர்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களுக்கு அனுபவ அறிவையும் தன்னைத் தானே உணரும் சக்தியையும் தருவதாக அமையும்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் `எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்கள். சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியசாலிகள். உங்களின் நட்சத்திரம் முழுக்க மீன ராசியில் அமைந்தது. மீனத்துக்கு 12-ல் குரு மறைகிறார். ஆகவே, எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையுடனும் நன்றாகச் சிந்தித்தும் செயல்படவேண்டும்.

குருப்பெயர்ச்சி
நட்சத்திர பலன்கள்
சதயம், பூரட்டாதி, 
உத்திரட்டாதி, ரேவதி

சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக் குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள்.

அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் பற்றி திட்டமிட்டு செயல்படுவீர்கள். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது. கடன் தொல்லை தீரும். தேக ஆரோக்கியம் மேம்படும்; நோய்கள் முடிவுக்கு வரும். வழக்குகளின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும். பங்குச் சந்தையில் லாபம் கூடும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம், சாப்பிடவும் தூங்கவும் நேரம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். சக வியாபாரிகளால் ஏற்பட்டிருந்த மறைமுக இடையூறு கள் நீங்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, பொறுமையாலும் அதிதீ முயற்சியாலும் வெற்றிகளைப் பெற வைப்பதாக அமையும்.