சினிமா
தொடர்கள்
Published:Updated:

பள்ளியின் முகம் மாற்றினோம்!

காழியூர்
News
காழியூர்

அருகில் இருக்கிற சிப்காட்டை நம்பித்தான் இந்தப்பகுதி மக்களோட வாழ்க்கை. குறிப்பா பெண்கள்தான் இங்கே பொருளாதார சக்தியா இருக்காங்க.

‘‘குழந்தைகளைத் தக்க வைக்கிறதும் ஈர்க்கிறதும் பள்ளியோட சூழல்தான். நான் இந்தப் பள்ளிக்கு ஆசிரியையா வந்து 21 வருஷமாச்சு. இன்னைக்கு வரும்போது அவ்வளவு புத்துணர்வா இருக்கு... எங்கள் 92 பிள்ளைகள் சார்பாகவும் எங்கள் கிராமத்து மக்கள் சார்பாகவும் விகடனுக்கு எங்கள் நன்றி...’’ நெகிழ்ச்சியுடன் கைகூப்புகிறார் வாசுகி.

வாசுகி, செய்யாறு வட்டாரத்தில் உள்ள காழியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை. 1926-ல் தொடங்கப்பட்ட பள்ளி, நூற்றாண்டை நெருங்கவிருக்கிறது. காழியூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களின் நம்பிக்கையாக இருக்கிற இந்தப்பள்ளியின் முகத்தை, விகடன் குழுமத்தின் அங்கமான வாசன் சாரிடபிள் டிரஸ்ட், 2,67,405 ரூபாய் செலவில் மாற்றியிருக்கிறது.

பள்ளியின் முகம் மாற்றினோம்!
பள்ளியின் முகம் மாற்றினோம்!
பள்ளியின் முகம் மாற்றினோம்!
பள்ளியின் முகம் மாற்றினோம்!

அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை எனக் கல்வி சார்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் வாசன் சாரிடபிள் டிரஸ்ட்டுக்கு ‘நூற்றாண்டைத் தொடவிருக்கும் காழியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடங்களை மராமத்து செய்து பெயின்டிங் செய்து தாருங்கள்' என்ற கோரிக்கை வந்தது. உடனடியாக டிரஸ்ட் களப்பணியாளர்கள் ஆய்வு செய்து திட்டங்களை உருவாக்க, கடந்த மே மாதம் பணிகள் தொடங்கின. மூன்று வகுப்பறைக் கட்டடங்கள் மழைநீர் ஒழுகா வண்ணம் மராமத்து செய்து வண்ணம் தீட்டப்பட்டன. சுவர்களில் இருந்த கரும்பலகைகள் புதுப்பிக்கப்பட்டன. கழிவறைக் கதவுகள் மாற்றப்பட்டன. அருகிலிருக்கும் அங்கன்வாடிக் கட்டடமும் மராமத்து செய்து வண்ணம் தீட்டிப் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் படிப்படியாக முகம் மாறும் தங்கள் பள்ளியைக் குழந்தைகள் ஆசை ஆசையாக வந்து பார்த்து மகிழ்ந்தார்கள். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்குள் பணிகளை நிறைவுசெய்து ஒப்படைத்தது வாசன் சாரிடபிள் டிரஸ்ட்.

பள்ளியின் முகம் மாற்றினோம்!
பள்ளியின் முகம் மாற்றினோம்!
பள்ளியின் முகம் மாற்றினோம்!
பள்ளியின் முகம் மாற்றினோம்!

‘‘அருகில் இருக்கிற சிப்காட்டை நம்பித்தான் இந்தப்பகுதி மக்களோட வாழ்க்கை. குறிப்பா பெண்கள்தான் இங்கே பொருளாதார சக்தியா இருக்காங்க. கல்வி மட்டும்தான் பிள்ளைகளோட வாழ்க்கையை மாற்றும்னு தீர்க்கமா நம்புற மக்கள். 2004-ல எஸ்.எஸ்.ஏ திட்டத்துல எங்களுக்கு வகுப்பறைக் கட்டடம் ஒண்ணு கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் அப்பப்போ ரிப்பேர் ஒர்க் பண்ணிக்குவோம். இருந்தாலும் மழைக்காலங்கள்ல கொஞ்சம் சிரமமா இருக்கும். முழுமையா மராமத்து செஞ்சு குழந்தைகளைக் கவரும்வகையில் வண்ணம் தீட்டணும்ங்கிறது எங்க கனவாவே இருந்துச்சு. ஆனா வெள்ளையடிக்கக்கூட முடியலே. நிறைய பேரை அணுகினோம். எங்க கோரிக்கை விகடன் காதை எட்டினதும் உடனடியா தொடர்பு கொண்டு நம்பிக்கையாப் பேசினாங்க. நேரடியா வந்து ஆய்வு செஞ்சாங்க. வேகவேகமா வேலை முடிஞ்சிடுச்சு. எங்கோ ஒரு குக்கிராமத்துல நூற்றாண்டைத் தொடப்போற ஒரு தொடக்கப்பள்ளியோட கனவை இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றித்தந்த விகடனுக்கு வாழ்நாள் நன்றி...’’ என்கிறார் வாசுகி.

‘எல்லோரும் இன்புற்றிருக்க' எக்காலமும் களத்தில் இருக்கும் விகடனின் அறப்பணி என்றென்றும் தொடரும்!