மாணவர்களுக்கு ஒரு பாடத்தின் மீது ஈடுபாடு வருவதும், விருப்பம் குறைவதும் அந்த பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைப் பொறுத்ததே. அவர்களின் குணம் ஒரு புறம் என்றால், மாணவர்களுக்கு அந்தப் பாடத்தை மிக எளிதாக புரிய வைக்கும் முறையை அந்த ஆசிரியர் பின்பற்றினால் போதும். அது மாணவர்களின் ஃபேவரைட் சப்ஜெக்டாக மாறிவிடும்.

வரலாறு என்றால் கதை சொல்லலாம், அறிவியல் என்றால் செய்துகாட்டலாம், மொழி படங்களில் கவிதையும், கட்டுரையும் களைகட்டும். ஆனால் கணக்கு அப்படியா? வெறும் எண்கள், சூத்திரங்கள் என சற்று ட்ரை ஆன சப்ஜெக்ட்தான். அதனாலேயே கணக்கு என்றால் பத்து அடி தள்ளி நிற்கும் மாணவர்கள் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் தீர்வு உண்டு. கணக்கைக் கண்டு பயப்படாமல் விளையாட்டாக ரசித்துப் படிக்கற பயிற்சியை உங்களது குழந்தைகள் பெற வேண்டும் என 'கணக்கு இனி கசக்காது' என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது ஆனந்த விகடன்.
பிரைன்கார்வ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த விகடன் நடத்தும் இந்த வகுப்பில், கணக்கை மிக எளிதாக அணுகும் சில வழிமுறைகளைச் சொல்லித் தர இருக்கிறார் டாக்டர்.பரமேஸ்வரி. இந்தப் பயிற்சி வகுப்பு மூலம், 1234x9999 போன்ற பெரிய கணக்குகளுக்குக் கூட சின்ன ட்ரிக் மூலம் சில விநாடிகளில் விடை கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளலாம். சவாலான கணக்குகளை பேப்பர், பேனா இல்லாமல் வெறும் விரல்களைக் கொண்டே 30 நொடிகளில் தீர்க்கலாம். இந்தப் பயிற்சியில் கணக்கை முற்றிலும் புதிய கோணத்தில் சுவாரஸ்யமாக அணுகக் கற்றுக்கொள்ளலாம். இப்படி நிறைய உண்டு.
பிரைன் கார்வ் (Brain Carve) நிறுவனத்தின் மூலம் குழந்தைகளின் மூளைத்திறன் வளர்ச்சி அதிகரிக்கப் பயிற்சி அளித்துவருகிறார் டாக்டர் பரமேஸ்வரி. வேதிக் மேத்ஸ் (Vedic Maths), அபாகஸ் என மிக வித்தியாசமான பாடத் திட்டங்களோடு, இளம் வயது மாணவர்களுக்கு மிக எளிதாக, சுவாரஸ்யமாகக் கணக்குப் பாடம் கற்றுக்கொடுக்கிறார்.

இந்த நிகழ்ச்சி பற்றிப் பேசியவர், "மாணவர்களின் புத்திசாலித்தனம் என்பது இளம் வயதில் முறையான பயிற்சி மூலம் நாம் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமை. அவ்வளவுதான். அந்தத் திறமையைத் தூண்டிவிடுவதே எண்கள் வேலை. செய்கிறோம். இரு கை விரல்களையும் பயன்படுத்தி ஜாலியாக குழந்தைகள் கணக்கு பயிலும்போது, அவர்கள் மூளையின் இடது, வலது இரண்டு பக்கமும் வேலை செய்யும், இது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்" என கணக்கைத் தாண்டி, இந்த பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தும் நன்மைகளையும் பகிர்ந்துகொண்டார்.

போட்டித் தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் இது போன்ற கணக்குப் பயிற்சியை உங்களது குழந்தைகளும் பெறுவதற்கு...