சினிமா
தொடர்கள்
Published:Updated:

விருதுநகரில் அறிவுத் திருவிழா!

விருதுநகரில் அறிவுத் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
விருதுநகரில் அறிவுத் திருவிழா!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டம் குறித்தும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘இன்ஃபோ 200’ சிறப்பு இணைப்பு, சுட்டி விகடனுடன் வழங்கப்பட்டு வருகிறது.

ள்ளி மாணவர்களுக்கு அதிலிருந்து தேர்வு நடத்தி, பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டுவருகிறது. பல மாவட்டங்களைத் தொடர்ந்து ‘விருதுநகர் 200’ வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், 54 அரசுப் பள்ளிகள் உட்பட 118 பள்ளிகளைச் சேர்ந்த 24,000 மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 1,320 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான பரிசளிப்பு விழா, ஜூலை 20ஆம் தேதி, சிவகாசி AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. காமராஜர் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிலும் பின்னர் மற்ற பள்ளி மாணவர்களும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர், “கிராமப்புற மாணவர்களுக்கு அனைத்துத் திறமைகளும் உள்ளன. சுட்டி விகடன் அளித்த இதுபோன்ற வாய்ப்புகளை மற்றவர்களும் அளித்தால், அவர்களும் கல்வியில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள்’’ என்றார்.

விருதுநகரில் அறிவுத் திருவிழா!

``கடந்த 25 ஆண்டுகளாகக் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் மாவட்டம் நம் விருதுநகர். கல்விதான் முன்னேற்றத்துக்கான ஒரே வழி!’’ என்று, விருதுநகர் வட்டாட்சியர் க.மாரியப்பன் நெகிழ்வும் பெருமையுமாகக் கூற, மாணவர்களின் கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லம், AAA கல்லூரி முதல்வர் சேகர், தியாகராஜர் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் இராஜா கோவிந்தசாமி, கல்லூரிச் செயலர் கார்வண்ணன் மற்றும் இணைச் செயலர் விக்னேஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று, பரிசு பெற்ற மாணவர்களை உற்சாகமூட்டினர். பேராசிரியை தேவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

பசுமை இந்தியா அமைப்பின் நாகராஜ், மாணவர்களுக்கு `விதை பென்சில்’ வழங்கினார். பாராட்டுப் பரிசுகளுடனும் அறிவுச் செல்வத்துடனும் உற்சாகமாகப் புறப்பட்டனர் விருதுநகர் மாணவர்கள்.