
தமிழ் வணக்கம்!
‘இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா’ என்பதுபோல், எந்த நாட்டுக்குச் சென்று வாழ்ந்தாலும், எத்தனை வருடங்களானாலும் தமிழர்கள் என்ற அடையாளத்தினால் நாம் எப்போதும் ஒன்றிணைகிறோம். தமிழ் மக்களான நீங்கள் தமிழக மக்களுடன் நேரடியாக உரையாட ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தவிருக்கிறது ஆனந்த விகடன்.
வாய்ஸ் ஆப் என்.ஆர்.ஐ - #VoiceOfNRI

கடல் கடந்து வாழும் உங்களின் வாழ்க்கை முறை அங்கே எப்படி இருக்கிறது என்பதில் தொடங்கி, நம் தமிழ்ப்பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள், அங்கே நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், நெகிழ்ச்சியான சம்பவங்கள், வித்தியாசமான அனுபவங்கள் என எதை வேண்டுமானாலும் குட்டி குட்டிச் செய்திகளாக மாற்றி எங்களுக்கு அனுப்புங்கள். சமூக வலைத்தளங்களில் #VoiceOfNRI என்ற ஹேஷ்டேகுடன் போட்டோ, வீடியோவாக கூட பதிவிடலாம். அவை சுவாரஸ்யமாகவும், வேறு தளங்களில் வெளிவராததாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. நீங்கள் செய்திகளாக அனுப்பும் போது அவை, 100 வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பது நலம். கூடவே அது தொடர்பான படங்கள் இருந்தாலும் அனுப்புங்கள். ஒருவேளை செய்திகள் எதுவும் இல்லை, நீங்கள் எடுத்த படங்களே கதை பேசும் என்றாலும் அதையும் அனுப்பிவிடுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் செய்திகள் மற்றும் படங்கள் ஆனந்த விகடன் இதழ், ஆனந்தவிகடன் சமூக வலைத்தளம் மற்றும் விகடன்.காம்-இல் வெளியாகும். உங்கள் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, செய்திகள் மற்றும் படங்கள் nri@vikatan.com என்ற இமெயில் ஐடி அல்லது சமூக வலைத்தளங்களில் #VoiceOfNRI என்ற ஹேஷ்டேகுடன் பகிரவும். எங்கிருந்தாலும் இணைவோம் தமிழால்!