FA பக்கங்கள்
Published:Updated:

பூட்டு, சாவி விளையாட்டில் Grammar

‘Grammar’ பகுதிக்கு உரியது.

பூட்டு மற்றும் சாவி ஓவியங்களை அட்டைகளில் வரைந்து, வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். பூட்டுகளில் I, You, We, They, He, She, It, Ram, Kala, Children போன்ற subject -களை எழுதிக்கொள்ளவும். சாவிகளில் am, is, are போன்ற verb வார்த்தைகளை எழுதிக்கொள்ளவும்.

பூட்டு, சாவி விளையாட்டில் Grammar

I பூட்டின் துளையில் நுழையும் அளவுக்கு am சாவி இருக்க வேண்டும்.

பூட்டு, சாவி விளையாட்டில் Grammar

அதுபோல You, We, They, Children பூட்டின் துளையில் நுழையும் அளவுக்கு are சாவி செய்ய

பூட்டு, சாவி விளையாட்டில் Grammar

வேண்டும்.

He, She, It, Kala, Ram பூட்டின் துளையில் நுழையும் அளவில் is சாவி இருக்க வேண்டும்.

ஆசிரியர், மாணவரை அழைத்து ஏதாவது ஐந்து பெயர்களை (பூட்டுகளில் உள்ளது) கூற வேண்டும். அந்த மாணவர், பொருத்தமான சாவியை எடுத்து பூட்டுக்குள் நுழைத்துக் காட்ட வேண்டும். தவறான சாவியைப் பொருத்தினால், பூட்டுக்குள் பொருந்தாது. மாணவர்கள் ஆர்வத்துடனும் விளையாட்டாகவும் இந்த மதிப்பீட்டில் கலந்துகொள்வர்.

- மூ.சங்கீதா,
அ.பெ.மே.நி. பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை.