‘கலை உலகில் கலைவாணர்’ பாடத்துக்கு உரியது.
‘மை’ என்ற எழுத்தில் முடியும் பல்வேறு சொற்களை, சார்ட்டில் எழுதி, மேஜையில் வைக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக: பொறாமை, உண்மை, நேர்மை, மடமை). பிறகு, கரும்பலகையில் ஒரு பக்கம் நன்மை தரும் ‘மை’ என்றும், மற்றொரு பக்கம் தீமை தரும் ‘மை’ என்றும் எழுதி ஒட்ட வேண்டும்.


பிறகு, மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து, பிளேட்டில் உள்ள ஏதாவது ஒரு சீட்டை எடுக்க

வேண்டும். அதைப் பற்றி தனக்குத் தெரிந்த கருத்தைச் சொல்லிவிட்டு, கரும்பலகையில் உள்ள இரண்டு பிரிவுகளில் சரியான பகுதியில் ஒட்டச் சொல்ல வேண்டும். உதாரணமாக, உண்மை என்று இருந்தால், அதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு, அதை நன்மை தரும் ‘மை’ என்பதன் அருகில் ஒட்ட வேண்டும்.
மாணவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம். இறுதியாக, ஆசிரியர் விளக்கிக் கூறுவதன் மூலம் தவிர்க்கவேண்டிய ‘மை’ மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய ‘மை’ பற்றித் தெரிந்துகொள்வர்.
- ஜி.கிறிஸ்டோபர்
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி,ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.