FA பக்கங்கள்
Published:Updated:

மாறும் வடிவங்களும் உருவங்களும்!

‘சமச்சீர்த்தன்மை’ பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள் (உதாரணம்: க, ப, N, D, O), எண்கள் மற்றும் பல

மாறும் வடிவங்களும் உருவங்களும்!

வடிவங்களின் மாதிரிகளை அட்டையில் தயார்செய்து, வண்ணக் காகிதத்தால் ஒட்டி வரச் சொன்னேன். முதலில், பல்வேறு சுழற்சிகள் (கால், அரை, முழுச் சுழற்சி) பற்றி விளக்கிக் கூறினேன். பிறகு, மாணவர்கள் கொண்டுவந்த வடிவங்களின் மாதிரிகளை மேஜை மீது வைத்தேன். ஒவ்வொரு மாணவராக அழைத்து, ஏதாவது ஓர் அட்டையை எடுத்து, நான் கூறும் சுழற்சியைச் செய்து காட்டச் சொன்னேன். சுழற்சிக்குப் பின்னரும் மாறுபடாமல் இருப்பவற்றைக் கண்டறியச் சொன்னேன்.

மாறும் வடிவங்களும் உருவங்களும்!
மாறும் வடிவங்களும் உருவங்களும்!
மாறும் வடிவங்களும் உருவங்களும்!

3 என்ற எண்ணை மேல் நோக்கித் திருப்பினால் ‘ய’ வரும் எனச் சொல்ல, அதைத் தங்கள் நோட்டில் எழுதிப் பார்த்தார்கள். மாணவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மதிப்பீடு வழங்கினேன். இதன் மூலம் ஒவ்வொரு சுழற்சியின்போதும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிந்துகொண்டார்கள்.


- ஜி.கிறிஸ்டோபர்,
மாநகராட்சி ஆரம்பப் பள்ளி,ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.