‘பொருட்களைப் பிரித்தல்’ பாடத்துக்கு உரியது.
மாணவர்களிடம், பல வகையான நோட்டுக்களைக் கொடுத்து அடுக்குமாறு கூற வேண்டும். அப்போது, மாணவர்கள் அந்த நோட்டுக்களை சைஸ் வாரியாகப் பிரித்து அடுக்குவதைக் கவனிக்கச் சொல்லலாம்.

‘ஜவுளிக் கடையில் எவ்வாறு துணிகளை அடுக்கி வைத்துள்ளார்கள்? என்று கேட்டு, பிரித்தலை விளக்கலாம்.’ இவ்வாறு கைகள் மூலம் செய்யும் செயல்கள், பிரித்தல் எனப்படும். மளிகைக் கடையில் எவ்வாறு சாமான்களைப் பிரித்து அடுக்குகிறார்கள், நம் வீட்டில் பாத்திரங்களை எவ்வாறு பிரித்து அடுக்குகிறார்கள் என்பதைக் கவனித்து வரச் சொன்னோம். திண்மக் கலவைகளைப் பிரிக்கும் முறைகளை விளக்கினோம்.

கட்டடம் கட்டும்போது மணலை எவ்வாறு பிரிக்கிறார்கள் என்பதை அந்த வடிகட்டியை வைத்துச் செய்து காட்டினோம். அரிசியை எடுத்து வந்து, அதிலிருந்து கல், தூசியைப் பிரிப்பதைப் பற்றியும் செய்து காட்டினோம்.
நாம் குடிக்கும் தண்ணீரில் தூசி விழுந்ததை எவ்வாறு வடிகட்டுவோம் என்பதை

விளக்கினோம். காய்ச்சல் வந்தால், நாம் தண்ணீரை எவ்வாறு குடிக்கிறோம் என்பதையும் விளக்கினோம். இதன் மூலம், திரவங்களை வடிகட்டல் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொண்டனர்.
உங்கள் பள்ளியிலும் செய்து பார்க்கலாமே!
- தி.முத்துமீனாள்,
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.