பொதுவானது
தேவையான பொருட்கள்: மின்அட்டைகள், வண்ணப் பேனாக்கள், கோமாளித் தொப்பி.
செய்முறை: 4 மின்அட்டைகளால் 5 செட்டுகள் தயார்செய்ய வேண்டும்.
• ஒரு செட்டில் உள்ள 4 மின்அட்டைகளில், ஒரு வினாவில் உள்ள 4 வார்த்தைகளைத் தனித்தனியாக எழுதிக்கொள்ள வேண்டும்.இதே போல 5 வினாக்களுக்கும் தனித்தனி செட்டுகள் தயார்செய்து மேஜை மீது வைக்க வேண்டும்.


• 4 மாணவர்கள் முன்னால் வந்து, முதல் செட்டின் 4 மின்அட்டைகளை எடுத்துக்கொண்டு அருகருகே நிற்க

வேண்டும். ஐந்தாவதாக ஒரு மாணவர் வந்து, கோமாளித் தொப்பியை எடுத்து, 4 வார்த்தைகளில் பொருத்தம் இல்லாத வார்த்தை வைத்திருப்பவரின் தலையில் மாட்ட வேண்டும்.
• உதாரணமாக செல்சுவர், பசுங்கணிகம், பெரிய நுண்குமிழ், சென்ட்ரோசோம் எனும் வார்த்தைகள் எழுதப்பட்ட மின்அட்டைகளை 4 மாணவர்கள் வைத்திருக்கிறார்கள். அதில், முதல் மூன்று வார்த்தைகள் தாவரச் செல்லில் காணப்படுபவை. நான்காவது வார்த்தையான ‘சென்ட்ரோசோம்’ விலங்கு செல்லில் காணப்படும். எனவே, அதுவே பொருத்தம் இல்லாத வார்த்தை.
• இதே போல அனைத்துப் பாடங்களுக்கும் செய்யலாம்.
- ப.குணசேகரன்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.