‘அரேபியர், துருக்கியர் படையெடுப்பு’ பாடத்துக்கு உரியது.
படிப்பதிலேயே ரொம்பக் கஷ்டமானது, பாடத்தில் வரும் ஆண்டுகளை நினைவில் வைத்துக்கொள்வதுதான். ‘அதிலும் வரலாறு பாடம் இருக்கே’ எனச் சலித்துக்கொள்ளும் மாணவர்களும், ஆண்டுகளைத் தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ள, செயல்பாடு ஒன்றைச் செய்யலாம்.


மாணவர்களை, சில குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். முதல் குழுவில் ஒருவரை எழுப்பி,

‘ஒன்றாம் வகுப்பை எந்த ஆண்டு படித்தாய்?’ எனக் கேட்க வேண்டும். அந்த மாணவர் 2008 என்று கூறினால், ‘இது இரண்டில் தொடங்குகிறது. அரேபியர்களின் சிந்து, முல்தான் படையெடுப்பு காலம் 2-ல் முடிகிறது. அதாவது, ‘கி.பி 712’ எனக் கூற வேண்டும். அதை ஓர் அட்டையில் எழுதி, வாசிக்கச் செய்யலாம். இப்படி மாணவரின் படித்த வகுப்புகள், பிறந்த வருடம் ஆகியவற்றோடு ஏதேனும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கூறினால், மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்வர். இது போல பாடம் நடத்திய ஆசிரியர் பெயரைக் கூறச் செய்து, அந்தப் பெயரோடு அரசர்கள் பெயர் வரும்படி மாற்றி நடத்தும்போது, எல்லா மாணவர்களுக்கும் மனதில் பதிந்துவிடும்.
மாணவர்களின் ஆர்வத்தைவைத்து மதிப்பீடு அளிக்கலாம்.
- தி.முத்துமீனாள்,
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.