பொதுவானது

சார்ட்டில் இந்திய வரைபடம் வரைந்து, கரும்பலகையில் ஒட்டிக்கொண்டேன். மாணவர்களிடம்,

தினமும் நீங்கள் படிக்கும் செய்தித்தாளிலிருந்து முக்கியமான பிரச்னைகளைத் தேர்ந்தெடுத்து, சின்ன அட்டையில் தங்களுக்குத் தெரிந்த அளவு, ஆங்கிலத்தில் எழுதச் சொன்னேன். பிரச்னைகளை Women rights, Politics, Environment என வகைப்படுத்தினோம். தாங்கள் எழுதிய பிரச்னை, இந்தியாவின் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, வரைபடத்தில் சரியாக ஒட்டச் செய்தேன். அந்தப் பிரச்னைகள் பற்றி ஆங்கிலச் செய்தித்தாள்களில் என்ன வந்திருக்கிறது என்பதையும் படிக்கக் கொடுத்தேன். ஒரே பிரச்னையைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்கும்போது எளிமையாகப் புரிந்துகொண்டனர்.

பாடத்தோடு ஆங்கிலத் திறனையும் இணைந்தே வளர்க்கக் கூடிய செயல்பாடாக இது அமைந்தது.

உங்கள் பள்ளியிலும் செய்து பார்க்கலாமே.
- தி.ஆனந்த்,ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.