இயற்கணிதம் பாடத்துக்கு உரியது.

‘X ≤ 4’ என்ற அசமன்பாட்டை விளக்க வேண்டுமெனில், x என்பது 4 மற்றும் 4-ஐ விட சிறியது

என விளக்க வேண்டும். இதனை நன்கு உணர்த்த, எண்கோடு வடிவ அட்டையில் விளக்கலாம். எண்கோட்டில் 4-ஐ குறிக்க, அந்த எண்ணுக்கு நேராக அடையாளக்குறியைப் பொருத்த வேண்டும். இன்னொரு அடையாளக் குறியை 4-க்கு குறைவாக உள்ள எண்ணில் பொருத்தி, அசமன்பாட்டை அறியச்செய்யலாம்.

இதுபோல வெவ்வேறு அசமன்பாடுகளை எழுதச் சொல்லி, அதற்கு விளக்கம் கூறி, எண்கோட்டில் குறிக்கச் சொல்லி மதிப்பிடலாம்.
- இரத்தின புகழேந்தி, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.
தொகுப்பு: வி.எஸ்.சரவணன்.
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், க.சதீஸ்குமார்,வி.சதீஷ்குமார், பா.பிரபாகரன்
அடுத்த இதழில்... அறிவியல் பாடத்துக்கு அதிக பக்கங்கள்