FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…
பிரீமியம் ஸ்டோரி
News
காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

காற்று பாடத்துக்கு உரியது.

சோதனை 1

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

ரு பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை எடுத்துக்கொள்ளவும். அதன் மூடியில் இரண்டு துளைகள் இடவும். இரண்டு துளைகளிலும் ஸ்ட்ராக்களைப் பொருத்தி நன்கு மூடவும். ஒரு ஸ்ட்ரா நீருக்குள் மூழ்கியும், மற்றொன்று நீரில் படாமலும் இருக்க வேண்டும். பிறகு, நீரில் படாமல் இருக்கும் ஸ்ட்ராவை ஊதவும். அப்படி ஊதும்போது ஏற்படும் காற்றின் அழுத்தத்தால், நீருக்குள் மூழ்கி இருக்கும் மற்றொரு ஸ்ட்ரா வழியாக நீர் வெளியே வருவதைப் பார்க்கலாம். இதன் மூலம் காற்றுக்கு அழுத்தம் உண்டு என அறியலாம்.

சோதனை 2

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

ரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் ஒரு துளையும்,  பாட்டிலின் அடிப்பகுதியில் சிறுசிறு துளைகளையும் இடவும். பிறகு, பாட்டிலில் நீரை நிரப்பி மூடவும். மூடியில் உள்ள துளையை விரலால் அழுத்திக்கொள்ளவும். நடப்பதை கவனிக்கவும். நீரானது அடிப்பகுதியில் உள்ள துளைகள் வழியாக வெளியேறாது. மூடியில் உள்ள துளையில் இருந்து விரலை எடுத்தால், அடிப்பகுதியில் உள்ள துளைகள் வழியாக நீர் வெளியேறும்.

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

மூடியின் துளையைத் திறந்ததும், காற்றின் அழுத்த சக்தியால் தண்ணீர் கொட்டுகிறது. மூடியின் துளையை விரல் மூடியதும், மேலிருந்து காற்று அழுத்தப்படவில்லை. ஆனால், கீழிருந்து காற்று மேல் நோக்கி அழுத்துவதால், நீர் கீழே கொட்டப்படாமல் தடுக்கப்படுகிறது.

சோதனை 3

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

ரு கண்ணாடிக் குடுவையின் மீது ஒரு பலூனைப் பொருத்தவும். பிறகு, குடுவையைச் சூடேற்றவும். அப்போது, வெப்பத்தால் குடுவையில் உள்ள காற்று விரிவடைந்து பலூனை உப்பச் செய்யும். இதன் மூலம், வெப்பத்தால் காற்று வரிவடையும் என்பதையும் காற்றுக்கு இடத்தை அடைத்துக்கொள்ளும் பண்பு உண்டு என்பதையும் அறியலாம். 

சோதனை 4

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

ரு கண்ணாடிப் பாத்திரத்தில் பாதி அளவு நீரை நிரப்பவும். ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியை  வெட்டி, அதன் மூடியில் ஒரு துளையிட்டு, ஒரு ஸ்ட்ராவினை செருகவும். பிறகு, பாட்டிலை நேராக நீரில் அமிழ்த்தவும். அவ்வாறு அழுத்தும்போது, ஸ்ட்ராவின் முனை அருகே ஒரு சிறிய காற்றாடியைப் பிடிக்கவும். குடுவையில் இருந்து வெளியேறும் காற்றின் விசையினால் காற்றாடி சுழலும். காற்றின் சீரான, குறிப்பிட்ட திசை நோக்கிய நகர்வால் பயனுள்ள விசை கிடைக்கிறது. இந்த விசையின் உதவியால்தான் காற்றாலை போன்றவை இயங்குகின்றன.

சோதனை 5

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

ரு குடுவையை எடுத்துக்கொள்ளவும். அதில் இரண்டு துளைகள் இட்ட கார்க் பொருத்தி, இரண்டு ஸ்ட்ராக்களைச் செருகவும். ஒரு ஸ்ட்ராவில் மட்டும் ஒரு முனையில் பலூன் ஒன்றைக் கட்ட வேண்டும்.  இவை குடுவைக்குள் இருக்கும். பிறகு, பலூன் இல்லாத ஸ்ட்ரா மூலம் குடுவையில் உள்ள காற்றை உறிஞ்சவும்.

அவ்வாறு காற்றை உறிஞ்சும்போது குடுவையில் காற்றின் அழுத்தம் குறையும். அதனை சமம் செய்ய, பலூன் செருகப்பட்ட ஸ்ட்ராவின் துளை வழியாக காற்று உள்ளே வரும். இதனால், குடுவையில் உள்ள பலூன் விரிவடைவதைக் காணலாம்.

சோதனை 6

காற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…

ரு கண்ணாடி பாட்டிலில் சிறிதளவு சமையல் சோடாவைப் போடவும். பிறகு, சிறிதளவு வினிகர் சேர்க்கவும். இரண்டும் வினைபுரியும்போது பாட்டிலில் இருந்து நுரை போன்ற வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) வெளிப்படும். வெளிவரும் வாயுவை, மெழுகுவத்தி சுடரின் மேல் செலுத்துகையில், சுடர் அணைந்துவிடும். இதற்கு காரணம், கார்பன்-டை-ஆக்ஸைடுக்கு எரியும் பொருளை அணைக்கும் தன்மை உண்டு. எனவேதான், கார்பன்-டை-ஆக்ஸைடு தீயணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.

(குறிப்பு: அனைத்து பரிசோதனைகளையும் ஆசிரியரின் மேற்பார்வையிலேயே செய்ய வேண்டும்)

- ஜி.கிறிஸ்டோபர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.