FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

சீறிப் பறக்கும் ராக்கெட்!

சீறிப் பறக்கும் ராக்கெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
சீறிப் பறக்கும் ராக்கெட்!

காற்று தொடர்பான பகுதிக்கு உரியது.

சீறிப் பறக்கும் ராக்கெட்!
சீறிப் பறக்கும் ராக்கெட்!

காற்றின் பண்புகள் பற்றி பாடம் நடத்தியதும், அடுத்த நாள் மாணவர்களே செயல்பாடு ஒன்றைச் செய்துகாட்டினார்கள்.

சீறிப் பறக்கும் ராக்கெட்!

A4 தாள் மூலம் சிறிய அளவில் ராக்கெட் வடிவம் செய்தார்கள். அதை, ஒரு பிளாஸ்ட்டிக் பாட்டிலின் வாய்ப் பகுதியில் செருகினார்கள்.  ஒரு மாணவர் பாட்டிலின் கீழ்ப் பகுதியை அழுத்த, ராக்கெட் லேசாக அசைந்தது. அடுத்து, வேகமாக பாட்டிலை அழுத்தியதும், ராக்கெட் பாட்டிலிருந்து விடுபட்டு, சற்று மேல் நோக்கி சென்றது.

அதைப் பார்த்ததும், வகுப்பின் மற்ற மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ராக்கெட்டை விண்ணில் செலுத்த, காற்றின் அழுத்தம் எந்த அளவு முக்கியம் என்பதை வெகு எளிமையாக செய்துகாட்டினார்கள்.

மேலும், காற்றின் அழுத்தம் பற்றி நூலகப் புத்தகத்தில்  சேகரித்த தகவல்களைக் கூறினார்கள். மதிப்பீடு தந்து பாராட்டினேன். இதுபோன்ற செயல்பாடுகளை மாணவர்களே முன்வந்து செய்வது பாராட்டுக்கு உரியது.

- மு.முத்துலெட்சுமி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.