FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

வேற லெவல் சினிமா 2017

வேற லெவல் சினிமா 2017
பிரீமியம் ஸ்டோரி
News
வேற லெவல் சினிமா 2017

பி.எஸ்.முத்து

‘எமோஜி’  ஹீரோ... லெகோ’ பேட்மேன்... பாப்பா’ பாஸ்...

ற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்களுக்கு உயிர்கொடுத்து, நம்மை குஷிப்படுத்துபவை அனிமேஷன் படங்கள். 2017-ம் வருடம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகும் சில ‘வேற லெவல்’ அனிமேஷன் படங்களின் ட்ரெய்லர்கள் இங்கே...

வேற லெவல் சினிமா 2017

சீரியஸான சாகசத்துடன் பார்த்துப் பழகிய பேட்மேனின் ஜாலி சாகச வெர்ஷன், ‘தி லெகோ பேட்மேன்’. லெகோ பிரிக்ஸ் வடிவத்தில் பேட்மேன், ஜோக்கர் போன்ற கேரக்டர்களுக்கு அனிமேஷன் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். பேட்மேனின் பரம எதிரியான ஜோக்கர் செய்யும் சேட்டையில் இருந்து, நகரத்தை பேட்மேன் காப்பாற்றும் அதே கதை. ஆனால், சாகசத்தோடு காமெடியும் கலந்து ரசிக்க வைக்கும். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் கிறிஸ் மெக்கே (Chris Mckay) இயக்கி இருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 10 ரிலீஸ்.

வேற லெவல் சினிமா 2017


குரங்கு, சிங்கம், கரடி, குதிரை என்று விதவித விலங்குகளின் வடிவங்களில் தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகளை சாப்பிட்டிருப்பீர்கள். இந்த அனிமல் க்ராக்கர்ஸ் பிஸ்கட் இருக்கும் மேஜிக் பெட்டியில் இருந்து, எந்த விலங்கு வடிவ பிஸ்கட்டை சாப்பிடுகிறோமோ, அந்த விலங்காகவே மாறிவிடுவோம் எனப் பரபரக்கவைக்கும் கற்பனையின் உச்சம்,  ‘அனிமல் க்ராக்கர்ஸ்’! சில்வெஸ்டர் ஸ்டோலோன் உட்பட, பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம்,  ஏப்ரல் விடுமுறையில் வருகிறது.

வேற லெவல் சினிமா 2017வழ்ந்து செல்லும் வயதில் குழந்தை ஒன்று, கோட் - சூட் அணிந்துக்கொண்டு பெரிய்ய்ய்ய்ய ஆபீஸராக அட்டகாசம் செய்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘தி பேபி பாஸ்’. இந்தக் குழந்தை செய்யும் அதிகாரத்தால் செம கடுப்பாகிறான் ‘டிம்’ என்கிற அவனுடைய  சகோதரன். இந்த அதிசய பேபி பாஸ் யார், எதற்காக வந்துள்ளான் என்கிற சுவாரஸ்யம்தான் கதை. மார்லா ஃப்ரேஸி (Marla Frazee) என்ற பெண் எழுத்தாளரின் ‘பாஸ் பேபி’ புத்தகத்தை தழுவிவியது. டாம் மெக்ராத் (Tom McGrath) இயக்கத்தில், ட்ரீம்வொர்க் அனிமேஷன் கம்பெனி தயாரித்துள்ளது. மார்ச் 31-ல் உங்களோடு ஜாலி மீட்டிங் நடத்த வருகிறான் இந்த பாஸ்.

வேற லெவல் சினிமா 2017


லெகோ படங்களின் லிஸ்ட்டில், பேட்மேன் போலவே பாய்ந்து வருகிறது, ‘தி லெகோ நிஞ்சாங்கோ மூவி’. இதுவும் வார்னர் பிரதர்ஸின் தயாரிப்புதான். இந்தப் படத்தின் புரமோஷன் குறும்படமான ‘தி லெகோ மாஸ்டர்’ வீடியோ செம வைரல். வு (Wu) என்கிற நிஞ்சா மாஸ்டரோடு மோதும் சேவல் ஒன்றின் ரகளை அதகளப்படுத்தும். படத்தில் வு மாஸ்டருக்கு குரல் கொடுப்பவர் நம்ம ஜாக்கி சான். சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு என்று கலர்கலரா நீங்கள் பார்த்த நிஞ்சா போராளிகள் லெகோ வடிவில் வருகிறார்கள். அமெரிக்க தொலைக்காட்சிகளில் அனிமேஷன் தொடர்களை இயக்கிவந்த சார்லி பீன் (Charlie Bean) இயக்குகிறார். செப்டம்பரில் வருகிறது.

வேற லெவல் சினிமா 2017

ம்முடைய எல்லா ஃபீலிங்ஸையும் ‘எமோஜி’களாக அனுப்பும் டிஜிட்டல் காலம் இது. அப்புறம், எமோஜி ஹீரோ படம் வராவிட்டால் எப்படி? செல்போன்களில் அடைப்பட்டுக்கிடக்கும் எமோஜிக்களின் ஃபீலிங்க்ஸ் என்னவாக இருக்கும்? அவற்றின் சீக்ரெட் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது ‘தி எமோஜி மூவி’. ஆகஸ்ட் 4 ரிலீஸ் எனத் தேதியையும் ட்ரெய்லரையும் வெளியிட்டு, இணைய ட்ரெண்டிங்கில் ஆவலைத் தூண்டி இருக்கிறது.  ‘குங்ஃபூ பாண்டா’ படத்தை இயக்கிய டோனி லியோண்டிஸ் (Tony Leondis) இந்தப் படத்தின் இயக்குநர். எமோஜி ஃபீலிங்ஸைப் புரிஞ்சுக்க ரெடியா?

வேற லெவல் சினிமா 2017

ஷ்ரூம் வீடுகளில் ஜாலியாக வசிக்கும் இந்த நீல நண்பர்களை மறக்க முடியுமா? இந்த வருட ஏப்ரல் கொண்டாட்டத்தில் இவங்களும் உண்டு. சீக்ரெட் மேப்பினால் தடைசெய்யப்பட்ட காட்டுக்குள்  புகுந்துவிடும் நான்கு ஸ்மர்ஃப்ஸ், தொலைந்துபோன கிராமம் ஒன்றைக் கண்டுபிடிப்பதே கதை. ஆளை விழுங்கும் பூக்கள், கண்களுடைய செடிகள், அதிசய விலங்குகள், வில்லனின் அட்டகாசம் என்று எல்லாமும் இருக்கும் படம், ‘ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்’. சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில், நீல நண்பர்கள் இறுதிக்கட்ட விறுவிறு பணிகளில் இருக்கிறார்கள்.

வேற லெவல் சினிமா 2017

குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் இழுத்து, தங்கள் இன்பாக்ஸில் போட்டுக்கொண்ட மினியன்ஸ், இந்த வருடமும் அதகளம் செய்ய வருகிறார்கள். இவர்களை உருவக்கிய க்ரூ (Gru) இப்போது சீக்ரெட் ஏஜென்ட். வில்லனுடன் சண்டைபோடும் கதைதான் என்றாலும், காமெடியில்  கொள்ளை அடிப்பார்கள். இதன் இரண்டாம் பாகம் கிட்டதட்ட 1 பில்லியன் டாலர் வசூல் சாதனை புரிந்தது. அந்தச் சாதனையை ஜூனில் வெளியாகும் மூன்றாம் பாகம் மிஞ்சும் என்று இப்போதே பரபரப்பு கிளம்பி இருக்கிறது

வேற லெவல் சினிமா 2017

ஹாலிவுட் படங்களுக்குப் போட்டியாக, இந்தியாவில் உருவாகும் அனிமேஷன் படம் ‘கூச்சி கூச்சி ஹோடா ஹைய்’ (Koochie Koochie Hota Hai). ஷாரூக், கஜோல் நடிப்பில் 1998-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த ‘குச் குச் ஹோடா ஹைய்’ (Kuch Kuch Hota Hai) படத்தின், க்யூட்டான அனிமேஷன் வெர்ஷன். முக்கிய கேரக்டர்களில் மூன்று நாய்கள் வருகின்றன. சேவல், கரடி, பூனை உள்ளிட்ட விலங்குகளும் மற்ற கதாபாத்திரங்களாக வருகின்றன. ஷாரூக் கான், காஜல், சஞ்சய் தத், ராணி முகர்ஜி போன்றோர் குரல் கொடுத்திருக்கிறார்கள். 2011-ம் ஆண்டே வெளியிட நினைத்த படம். ‘இந்தியாவின் மிகப் பிரமாண்டமான  அனிமேஷன் படமாக உருவாக்கும் முயற்சியால் தாமதம் ஆகிவிட்டது. 2017-ல் வெளியாவது உறுதி’ என்கிறார்  தயாரிப்பாளர் கரண் ஜோஹர். ஆல் ஆர் வெயிட்டிங்!