FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

நாணயங்கள் சாய்வதில்லை!

நாணயங்கள் சாய்வதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயங்கள் சாய்வதில்லை!

என்.மல்லிகார்ஜுனா

‘கொஞ்சம் கற்பனை, நிறைய பொறுமை... அதுதான் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகா தனு (aka Tanu).

நாணயங்கள் சாய்வதில்லை!

பல்வேறு நாட்டின்  நாணயங்களைச் சேகரித்து,  ஒன்றின் மீது ஒன்றாக பல்வேறு வடிவங்களில் நிற்கவைக்கவைத்து, பார்ப்போரை அசத்துகிறார் அகா தனு.

நாணயங்கள் சாய்வதில்லை!

‘‘இவ்வாறு நாணயங்களை அடுக்கும்போது, சற்றே பலமாக மூச்சுக் காற்றுப் பட்டாலும் எல்லாம் விழுந்துவிடும். திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ‘‘முதல் முறை இவ்வாறு அடுக்கிய  காயின் கோபுரத்தை படம் பிடித்து, ட்விட்டரில் பதிவுசெய்தேன். பலரும்  பயனற்ற திறமை என்று கேலி செய்தார்கள். கவலைப்படாமல், தொடர்ந்து செய்தேன். இப்போது, அதே  ட்விட்டரில் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.  நமக்குப் பிடித்த விஷயத்தை  ஈடுபாட்டுடன் செய்யும்போது, அதற்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும்’’ என்கிறார் அகா தனு.

திறமைக்கு சல்யூட்!