
News
பொதுவானது


மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கும் விதத்தில், அவர்களுக்குப் பிடித்த உருவங்களை வண்ணத்தாள் அல்லது ஏதேனும் பொருட்களில் செய்யச் சொன்னேன். ஒரு மாணவி, மஞ்சள் நிறக் காகிதத்தை சின்னச் சின்னதாக மடக்க ஆரம்பித்தார். விசிறி செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால், முழு வட்டமாக ஒன்றும் அரை வட்டமாக மூன்றும் மடித்து, நான்கையும் சார்ட்டில் ஒட்டியபோது, அழகான பூனை வந்திருந்தது. அவரைப் பார்த்து, மற்ற மாணவர்களும் கோழி, குதிரை, சேவல், பூங்கொத்து என விதவிதமாகச் செய்து அசத்தினர்.

மாணவர்களின் படைப்பாற்றலைப் பாராட்டி மதிப்பீடு அளித்தேன்.
- ப.ஸ்ரீபிரியங்கா, அ.ந.நி.பள்ளி, மொடக்குறிச்சி, ஈரோடு.