
Grammar பகுதிக்கு உரியது.
மாணவர்களிடம், ‘‘புதிய விளையாட்டு ஒன்றை ஆடத் தயாரா?’’ என்று கேட்டேன். உற்சாகத்தோடு ‘‘சரிங்க சார்’’ என்றார்கள்.


Cell, some, two… போன்ற சில சொற்களை சார்ட் பேப்பரில் எழுதி, கரும்பலகையில் ஒட்டினேன். வேறு சில சொற்களையும் சார்ட் பேப்பரில் எழுதி, மேஜை மீது வைத்தேன். மாணவர்களை நோக்கி, ‘‘கரும்பலகையில் நான் ஒட்டியுள்ள சொற்களுக்கு இயைந்த ஓசையுடைய, அதேநேரம் பொருள் மாறுபடக்கூடிய சொற்கள் மேஜை மீது உள்ளன. அந்தச் சொற்களைச் சரியாகப் பொருத்தும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்’’ என்றேன்.
மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான இணையைப் பொருத்தி அசத்தினார்கள். (உதாரணம்: Cell - Sell, Some - Sum, Two - to). பிறகு, இவைதான் homophones என்று விளக்கிக் கூறினேன். மற்றொரு செயல்பாடாக, மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, homophones-ஐக் கண்டுபிடிக்கச் சொன்னேன்.

இறுதியில் அனைத்துக் குழுக்களும் கண்டுபிடித்தவற்றைப் பற்றிக் கலந்துரையாடச் செய்தேன்.
- ஜி.கிறிஸ்டோபர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.