
தோராயம் பாடத்துக்கு உரியது.

மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக்கொண்டேன். பல எண்ணிக்கைகளில் பலவிதமான பொருட்களை மேஜை மீது வைத்தேன். (உதாரணம்: பென்சில்கள், புத்தகங்கள், மிட்டாய்கள்).

ஏதோ செயல்பாடு செய்யப்போகிறோம் என்கிற உற்சாகத்தோடு மாணவர்கள் தயாரானார்கள். முதல் குழுவில் இருந்து இரண்டு பேரை அழைத்து, ஒருவரிடம் மேஜையில் உள்ள ஒரு தட்டை எடுக்கச் சொன்னேன். மற்றவரிடம் காண்பித்து, அதில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையைத் தோராயமாகக் கேட்டு, அந்த எண்ணிக்கையைக் குறித்துக்கொள்ளச் சொன்னேன். பிறகு, இருவரையும் அந்தப் பொருட்களைச் சரியாக எண்ணச் சொன்னேன். தோராயமாகக் கூறிய எண்ணிக்கையும் சரியான எண்ணிக்கையும் ஒரே அளவில் இருந்தால், குழுவுக்கு முழு மதிப்பீடு வழங்கினேன்.

இதுபோன்று ஒவ்வொரு குழுவாக வந்து, பொருட்களின் எண்ணிக்கையைத் தோராயமாகவும், சரியாகவும் கணக்கிட்டார்கள். இதன் மூலம், தோராயமான எண்ணிக்கை மற்றும் சரியான எண்ணிக்கையின் வேறுபாடுகளையும், தோராயத்தின் பொருளையும் அறிந்துகொண்டனர்.
- ஜி.கிறிஸ்டோபர்,மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.