
அனைத்து வகுப்புகளுக்கும் பொதுவானது.

தேவையான பொருட்கள்: பெரிய அளவிலான உலக, இந்திய மற்றும் தமிழ்நாடு வரைபடங்கள் (A3), சிறிய துண்டுச் சீட்டுகள், வண்ணப் பேனாக்கள், குண்டூசிகள்.

*மாநிலங்கள், நாடுகள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களைத் துண்டுச் சீட்டுகளில் எழுதி, தனித்தனி பெட்டிகளில் வைக்கவும்.
*உலக, இந்திய மற்றும் தமிழ்நாடு வரைபடங்களை மரப்பலகை அல்லது தெர்மாக்கோலில் பொருத்தி, மேஜை மீது சாய்த்து வைக்கவும்.

*ஒவ்வொரு மாணவரும் முன்னால் வந்து, ஏதேனும் ஒரு பெட்டியில் இருந்து ஒரு சீட்டை எடுக்கவும்.

*உதாரணமாக, மாவட்டங்கள் பெட்டியில் இருந்து தருமபுரி என்ற சீட்டை எடுத்தால், தமிழ்நாடு வரைபடத்தில் சரியான இடத்தில் குண்டூசியின் உதவியால், அந்தச் சீட்டை குத்திவைக்க வேண்டும்.
இப்படி எல்லா மாணவர்களுக்கும் வாய்ப்பு அளித்தால், மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்வார்கள்.
- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.