
News
கால அளவை பகுதிக்கு உரியது.

மாதம், நாள் உள்ளிட்ட கால அளவை குறித்த செயல்பாடு ஒன்றைச் செய்தோம்.
ஒரு சார்ட்டில் ஓர் ஆண்டின் முக்கிய தினங்களை எழுதினேன். துண்டுச் சீட்டுகளில் அந்தத் தினங்களுக்குரிய நாட்களை எழுதினேன். மாணவர்களை அழைத்து, ஒவ்வொரு தினத்துக்குரிய தாள்களை அவற்றுக்கு நேராக ஒட்டச் சொன்னேன். இந்தச் செயல்பாட்டில் அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்தேன். பிறகு, குறிப்பிட்ட இரு தினங்களைக் கூறி, அவற்றுக்கு இடையே எத்தனை நாட்கள் உள்ளன, மாதக் கணக்கு உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பினேன். அவற்றுக்கு, மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன்.


- இரா.தெய்வஜோதி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.