
எரிதல் மற்றும் சுடர் பாடத்துக்கு உரியது.
வெப்பமேறுதல் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள, எளிய செயல்பாடு ஒன்றைச் செய்தோம்.

மாணவர்கள் குழுவாக இணைந்து, ஒரு காகிதக் குவளையில் நீரை ஊற்றி வெப்பப்படுத்தினார்கள். நீர் வெப்பம் அடைந்தது. ஒரு மாணவன், ‘‘குவளையின் உள்ளே உள்ள நீர் வெப்பம் அடைகிறது. ஆனால், காகிதக் குவளை எரியவில்லையே ஏன்?’’ எனக் கேட்டான்.
அதற்கு இன்னொரு மாணவன், ‘‘காகிதக் குவளை எரிவதற்குத் தேவையான வெப்பநிலை கிடைக்கவில்லை. அதனால், காகிதக் குவளை எரியவில்லை’’ எனக் கூறினான்.

இதைத்தான் ‘எரிவெப்பநிலை’ என்கிறோம். இதுபோல பலவித கேள்விகளை எழுப்பி, சந்தேகங்களைத் தீர்த்தேன். இந்தச் செயல்பாட்டின் மூலம், ஒவ்வொரு மாணவரின் ஈடுபாடு மற்றும் செயல்படும் திறன் அடிப்படையில் மதிப்பீடு வழங்கினேன்.
- மு.திலகவதி, சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.