
ஒரு ஐடியா... ஓஹோ வரவேற்பு!

ஒரு சின்ன ஐடியா மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி, பெரிய வெற்றிக்கு வித்திடும் என்பதற்கு உதாரணம், ‘ஃபேமிலி பிரேக் ஃபைண்டர்’ (Family Break Finder) என்ற சுற்றுலா இணையதளம். விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்க சுற்றுலா செல்பவர்களுக்கான இடங்கள், ரயில், விமானப் போக்குவரத்து வசதி என முழுவிவரங்களையும் அளிக்கும் இந்த இணையதளம், யுனைடெட் கிங்டம் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. 1,40,000 பேர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக புதிய புதிய ஐடியாக்களில் தகவல்களை அளிப்பது இந்த இணையதளத்தின் ஸ்டைல். இப்போது, உலக வரைபடத்தில் உள்ள ஒரு நாட்டின் பெயருடன், அந்த நாட்டின் சுற்றுலாத்துறை வெளியிடும் ஸ்லோகனையும் சேர்த்து வெளியிட்டு, ‘அட’ என வியக்கவைத்துள்ளனர். உதாரணத்துக்கு, இந்தியாவின் ஸ்லோகன், ‘incredible india’ என்பது. இதுபோல பிற நாடுகளின் சுற்றுலா ஸ்லோகன்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? https://www.familybreakfinder.co.uk/ என டைப் செய்து பாருங்கள்.
