பொது அறிவு
Published:Updated:

செல்லமே செல்லம்! - செல்லப் பிராணிகளை வளர்க்கச் சில குறிப்புகள்

செல்லமே செல்லம்! - செல்லப் பிராணிகளை வளர்க்கச் சில குறிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லமே செல்லம்! - செல்லப் பிராணிகளை வளர்க்கச் சில குறிப்புகள்

விஸ்வா, ஜெ.சாய்ராம் - படங்கள்: தி.குமரகுருபரன்

ஏன் வளக்க வேண்டும்: ஒரு செல்லப் பிராணியிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். ஓர் அன்பான அரவணைப்புக்காக, எதிர்பார்ப்பில்லாத பாசத்துக்காக, பாதுகாப்பாக உணர்வதற்காக, மகிழ்ச்சியாக வாழ, என நீங்கள் நினைத்தால், யெஸ். நீங்கள் ஒரு செல்லப் பிராணியை வளர்க்கலாம். உங்கள் வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிக்கும் இவற்றுடன் நேரம் செலவழிப்பது ஓர் இதமான மருந்து.

கமிட்மென்ட்:
ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பது என்பது ஒரு பெரிய கமிட்மென்ட். அதற்கென்று ஒரு மனப்பக்குவம் தேவை. தொடர்ச்சியான அக்கறை வேண்டும். குட்டியாக இருக்கும் போது, அனைவருக்குமே பிடிக்கலாம். ஆனால், வயதான பிறகு ஒரு நாள் இல்லை, ஒரு மணி நேரம் பிரிந்து இருந்தாலே அவற்றால் தாங்கிக் கொள்ள இயலாது.

செல்லமே செல்லம்! - செல்லப் பிராணிகளை வளர்க்கச் சில குறிப்புகள்

சுற்றுப்புறச் சூழல்: எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பதாக இருந்தாலும், அதற்கென்று ஒரு வளர்ப்புச் சூழல் தேவைப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் நாய்க்குட்டியை வளர்க்கப்போகிறீர்கள் என்றால், அது நடை பயில, சுற்றி விளையாட என ஒரு குறிப்பிட்ட இடம் தேவை. எனவே, அதற்கான இடம் இருக்கிறதா என்பதை முதலில் சரி பார்த்துக்கொண்டு அதன்பிறகு செல்லப் பிராணிகளை வீட்டுக்குக் கொண்டு வாருங்கள்.

புரிதலுக்கு நேரம் ஒதுக்குங்கள்: ஒரு செல்லப் பிராணியை வீட்டுக்குக் கொண்டு வந்த உடனே, அதற்கென்று நேரத்தை ஒதுக்குங்கள். அதன் நம்பிக்கையை நீங்கள் பெற வேண்டும். புதிய இடத்தில், புதிய ஆட்களுடன் பழக, அந்தக் குட்டிக்கு நேரம் எடுக்கும். அதன் நம்பிக்கையை நீங்கள் கஷ்டப்பட்டுதான் பெற வேண்டும். ஆகவே, முதல் ஒரு மாதம் அதனுடன் நிறைய நேரம் செலவிடுங்கள்.

செல்லமே செல்லம்! - செல்லப் பிராணிகளை வளர்க்கச் சில குறிப்புகள்

கோபம் வேண்டாம்: கோபம் வந்தால், அதை நீண்ட நேரம் நீட்டிக்க வேண்டாம். குறிப்பாக, தண்டனைகள் (கட்டிப் போடுவது, அறையில் அடைப்பது போன்றவை) கூடவே கூடாது. உங்களுக்கு என்று ஸ்கூல், விளையாட்டு, நண்பர்கள் என எவ்வளவோ இருக்கிறது. ஆனால், உங்கள் செல்லப் பிராணிக்கு, நீங்கள்தான் உலகம். ஆகவே, உங்கள் கோபம் அதை மிகுதியாகப் பாதிக்கும்.

யோசியுங்கள்:
உங்கள் செல்லப்பிராணி திடீரென்று உங்கள் சொல்பேச்சு கேட்கவில்லை என்றாலோ, சாப்பிடவில்லை என்றாலோ, அதைக் கண்டிக்காதீர்கள். ஏதோ ஒரு விஷயம் அதை உறுத்துகிறது என்று பொருள். உணவு, உடல்ரீதியிலான மருத்துவத் தேவை என்று பல விஷயங்கள் இருக்கலாம். ஆகவே, காரணங்களைத் தேடுங்கள்.

செல்லக் குட்டிகளுடன் பேசுங்கள்:
உங்கள் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும், உங்கள் குரல் அந்தக் குட்டிக்கு நன்றாகப் புரியும். ஆகவே, உங்கள் செல்லப்பிராணிகளுடன் தொடர்ந்து பேசுங்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, அவை உங்களை நன்றாகப் புரிந்துகொள்ளத்
தொடங்கும்.

மருத்துவ உதவி:
ஒரு செல்லப் பிராணியை வீட்டுக்குக் கொண்டு வந்த உடனே நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், அதற்கென்று ஒரு மருத்துவரை செலக்ட் செய்வதுதான். ஒவ்வொரு செல்லப்பிராணிக்கும் தொடர்ச்சியான மருத்துவக் கவனிப்புத் தேவை.

பேர் வைத்துக் கூப்பிடுங்கள்:
ஒரு செல்லக்குட்டிக்கு அதை நாம் எப்படி அழைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரே குறிப்பிட்ட சத்தம் தொடர்ந்து வருகிறதே? என்று யோசித்து, அதன் பின்னர் அந்த சத்தம் வரும்போதெல்லாம் அவை அதற்கு ரியாக்ட் செய்யும். ஆகவே, ஒரு நல்ல பெயரை (முடிந்த அளவிற்கு, சுருக்கமாக) வைத்து, தொடர்ந்து அழையுங்கள். ஆரம்ப நாட்களில், இதுதான் நமது பெயர் என்று அதற்குப் புரியும் வரை, பலமுறை அழையுங்கள்.

அடிக்காதீர்கள்:
உங்கள் செல்லப் பிராணி களை எந்தக் காரணத்தைக் கொண்டும் அடிக்கவே அடிக்காதீர்கள். அது ஒரு வகையான எதிர்மறை விளைவை ஆழ்மனத்தில் ஏற்படுத்திவிடும். மேலும், உங்களைவிட உங்கள் செல்லப் பிராணிகளுக்கு உடல் வலு அதிகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.